பெண்ணே
- எஸ்.தியாகராஜன்
கொள்வாய் என்றிருந்தேன்,
கொல்கிறாயடி பெண்ணே!
நிற்கையிலும், நடக்கையிலும், தூங்கி
விழிக்கையிலும் உன் நினைவு.
பூவிலும், காற்றிலும், நான் விடும்
மூச்சிலும் உன் வாசம்.
பெண்ணே!
உன்பார்வை எந்தன் உந்து சக்தியா,
இல்லை எனை சாய்க்கும் உத்தியா?
மலரினும் மெல்லியதாம் காதல் - காதல்
வலி அறியாதான் சொல்லியது போலும்.
துருதுருக்கும் உன் விழிகள், என் மனத்
துருபோக்கும் வழிகள்.
தாஜ்மஹால், காதலின் உச்சம், நாமிருவர்
உண்மைக் காதலின் மிச்சம்.
இதயமாற்று சிகிச்சை அறிவியல் கண்டுபிடிப்பா?
யார் சொன்னது!
அது காதலின் விந்தை.
காதலின் விதை.
காதல் காதல் காதல் - காதல் போயின்
சாதல் சாதல் சாதல், என்றான் பாரதி.
திருத்தி சொல்கிறேன், கேள்.
காதல் காதல் காதல் "உன்" காதல் போயின்
சாதல் சாதல் சாதல்
தீயிறங்கவும் சம்மதம்,
அணைக்க நீ வருவாய் என்றால்.
தோற்கவும் சம்மதம், தோற்பது
உன்னிடமென்றால்.
பெண்ணே!
என்னை அடிப்பதாய் இருந்தாலும், உன்
உதடுகளால் அடி.
திட்டுவதாய் இருந்தாலும் தமிழால்
திட்டு.
- எஸ்.தியாகராஜன் ([email protected])
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications