அவைகளும் நாமும்
(தட்ஸ்தமிழில் இது ரிஷி சேதுவின் 50வது கவிதையாகும்)
காய்ந்த தாமரை
வேர் பிடுங்கி
விளையாண்ட
நேரங்கள்.....
மார்கழி
பனியிரவில்
குளிர்காயும்
நெருப்பின்
உரசல்களில்
மனம் வெளியேரும்
கணங்கள்......
கனவு வெளிகளில்
உலவும் நட்சத்திரங்களாய்
இளந்தூரலில் நனைந்த பூக்களாய்
காலம் வரைந்த கோலங்களில்
உண்மைகள் தொலைத்த குழந்தைகளாய்தானே வாழ்கிறோம்
இன்னமுமனதளவில்.....
நண்பா உண்மையைச்சொல்
எத்தனை நண்பர்கள்
இன்னமும் தொடர்போடிருக்கிறார்கள்
என்னவாயிற்று எங்கே தொலைந்தோம் நாம்
வாழ்வெனும் பேரலை, சுழற்காற்று
நம்மை மூழ்கடித்து அதன்போக்கில்
அடித்துப்போனதன் நிஜம்
நாம் காலப்போக்கில்
நண்பர்களை மாற்றினோம்
வார்த்தைகளை மாற்றினோம்
என் இனிய என்று ஆரம்பித்து
என்றென்றும் அன்புடன் என்றுமுடியும்
கடிதங்களுமாய் வாழ்ந்த நாம்
smsகளாய் சுருங்கிப்போனோம்
அந்தக்குளமும் தாமரையும்
மாலைவெயிலில் இன்னமும்
அழகாயிருக்கிறது நண்பா....
நினைத்துப்பார்
அப்படியே இருந்திருக்கலாம்
அவைகளோடு
நாமும்.....
-ரிஷி சேது ([email protected])
Read Other Articles By The Same Author












Click it and Unblock the Notifications