மின்மினிப்பூச்சிகளாய் உன் வருகைகள்..
Subscribe to Oneindia Tamil

எழுந்து போவதற்கான
அவகாசத்திற்காய்- நீ
எப்போதும் காத்திருக்கும்
ஆசையோடு நான்...
தவிர்த்துவிடக்கூடிய
வாய்ப்புகளோடு-நீ
தவித்த நெஞ்சத்தோடு-நான்
என் கருத்த இரவுகளில்
மின்மினிப்பூச்சிகளாய் உன் வருகைகள்..
இதனை இதனால் என்று
எதையும் அறிவால் அனுகும்
சந்தர்ப்பங்களோடே எப்போதும்- நீ
என்னறிவிற்கெட்டாவிடினும்
உன் பேச்சை ரசித்திருக்கும்
மழையிலையும் சிறு பறவையாய்-நான்
கையில் பிடித்துவைத்த காற்றுபோல்-நீ
-ரிஷி சேது [email protected]












Click it and Unblock the Notifications