கேள்விக்குறிகள்
-கிரி
முற்றுப்புள்ளிகள், கேள்விக்குறிகளாகி விடும் வாழ்க்கையிது;
அவைகளை ஆச்சரியக்குறிகளாக நிமிர்த்திடும் முன்னர், நம்
நிமிர்ந்த முதுகெலும்புகளை குழைந்து வளைத்திடும், காலமிது.
கனவுகள், கனவு கண்ட நினைவுகள்,
கனவெனும் விந்தணு மட்டும் தனியே
கருவாய் வளரத்துடிக்கும் உணர்வுகள் - இவைகள் மிதக்கும்
சாக்கடைப் போல், சமூகச் சந்தைக்கடைகள்.
அந்த சந்தைகளில், விலை போகாததால்
வெள்ளத்தனைய மலர்நீட்டம் பொன்ற, உள்ளத்தனைய மனவாட்டம்.
இருப்பினும் இல்லாவிடினும், இருப்பென்னெவோ, கவலைகள்தாம்
நாளை நல்ல நாளென்று நம்பும் ஆரூடதாசர்கள்,
நேற்றில் மட்டுமே ரசித்து வாழும், இன்றைய நடைபிணங்கள்,
இன்று மட்டும்தான் நம் கையிலென,
இருட்டில் பொழுதைக் களிபுரியும், சிந்தையற்ற நபும்ஸகர்கள், என
இங்கெல்லாம், சிறு பொழுதுகளில் வாழ்ந்து மடியப்போகும் ஜீவராசிகள்தாம்.
நேற்று போல், இன்று போல்,நாளையும் கேள்விகள்தாம் .
அக்கேள்விக்கணைகளால் மடிவதோ ?
'அந்தோ! யாவும் போனதென்று' நம் காலங்கள் முடிவதோ ?
வாழ்வின் மிகப்பெரும் வெற்றி யாதெனக் கேளீர்...
கனவு நிஜமாவதன்று; சித்தம் தவமாவதே.
கை, காசால் நிறைவதன்று; வைராக்கியம் வரமாவதே...
காலங்கள் கழிந்தாலும் கரையாத ஆசைகள்,
கோலங்கள் சிதைந்தாலும் குறையாத மனத்தெளிவு,
இவைகளெல்லாம், காலத்தை வென்றிடாதா ?
யாவும் நிலையில்லை என்றால்,
கேள்விகளும், கவலைகளும் மட்டும் நிலையா, என்ன ?
இந்தக் கேள்விக்குறிகளை புணர்ந்து, ஆச்சரியக்குறியாக்கிவிடுவோம் !
இந்தத் திறம் கொண்டு,
இன்னும் பல கேள்விகளை நாம் காதலித்துப் புணர்ந்து,
நம் கவலைகட்கு, புணர்ஜென்மம் புலரட்டும்....
-கிரி ([email protected])
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications