சார்பியல்
Subscribe to Oneindia Tamil
-அனுக்ரஹா
சிதறுண்டு பிறந்த பூமி
புறம் குளிர்ந்து,
வளியுலகைப் போர்த்திக் கொண்டு,
சீரான நோக்கத்தில்
சூரியனைச் சுற்ற,
தன்னைச் சுற்றும்
சந்திரனும் பிறந்தும்,
தன்னகத்தின் தீயை
உணரவில்லை!
உணர்வுகளைப் பூசிக்கொண்டு,
தன் சிந்தையினைத்
தீண்டாமல்,
சமுதாய வாழ்விலே
சுழலும் மனிதன்!
தாயைப் போல பிள்ளை?!
-அனுக்ரஹா([email protected])












Click it and Unblock the Notifications