சிந்தும் மழைத்துளியிலும் நீயே!
Subscribe to Oneindia Tamil

நீ வாங்கித்தந்த பேனாவில்தான்
உனக்கான கவிதைகள் பிறக்கின்றன…
ஊர்வலம் போகும்
கார்கால மேகங்கள்
சிந்தும் மழைத்துளியில்
நீயே சிரிக்கின்றாய்!
உடலை வருடும்
இதமான குளிர்காற்று
உரசும் போதெல்லாம்
உன் விரல் தொட்ட ஞாபகம்!
மலர்களின் சுகந்தம் கூட
உன் வாசனையை மட்டுமே
தாங்கி வருகின்றன!
எத்தனையோ முறை
நேரில் பார்த்தும்
எதுவும் சொல்லத் தோன்றவில்லை….
ஆனால்
கனவில் தினமும் வரும்
உன் முகம் பார்த்து கூறுகின்றேன்
என் உயிர் நீதான் என்பதை!.












Click it and Unblock the Notifications