அழியாத காதல் கதை . . .!
Subscribe to Oneindia Tamil
அருகருகே அமைந்த கிராமம் தான்
எனக்கும் அவளுக்கும் . . .
எல்லோருக்குள்ளும் மலர்ந்தது போலவே
எனக்குள்ளும்
அரும்பு காதல் . . .
அழகாய் பூத்து
காலத்தால் உதிர்ந்து போன - என்
கதை தான் இது . . .

உயர் நிலை பள்ளிக்கு
மிதி வண்டி பயணம்
ஒத்தையடி பாதையில் . . .
அவளின்
யதார்த்தமான சந்திப்பு . . .
ஒரு சில நிமிடங்களில்
பரிமாறி கொண்ட
பார்வைகள்
வாரம் நகர்ந்தும்
மறந்து போகாத அந்த நிமிடங்கள் . . . திரும்பவும்
அவளின் ஓர பார்வைக்காகவே
மிதி வண்டியை உருட்டிக்கொண்டு
செல்லும் அளவிற்கு வந்து விட்டது . . .
ஆம்
எனக்குள்ளும் பருவ கால மாற்றம் . . .
அவளுக்கும் அப்படி தான் . . .
என்றோ ஒருநாள் விடுப்பில்
இருந்து மறுநாள் சென்றபோது
அவள் விழியின் விசம்பல்களில். . .
தெரிந்துகொண்டேன் . . .
இங்கு வசன உச்சரிப்புகள் இல்லை
தோழிகள் ஜாடை சொல்லும் வாக்கில்
சங்கதி சொல்வதும்
பார்வையும் சிரிப்பும் மட்டுமே
எங்களுக்கான வாசகங்கள் . . .
அப்போதெல்லாம் ஆணும் பெண்ணும்
பேசுவது என்பது
ஊராரின் பார்வையில் மட்டும் அல்ல
என்குல பெண்களுக்கும் தெய்வ குத்தம் தான் . . .
எட்டி நின்று பேசுவது கூட எட்டாத நிலை தான் . . .
என் காதலுக்கு வார்த்தை தான் இல்லை
ஆனால் கண்களின் மொழியும்
மயிலிறகு குட்டியும்
அவ்வப்போது தூது போனது
சில சமயம் தீபாவளி
பொங்கல் வாழ்த்து
அட்டைகளும் இடம் பெயரும்
இடம் மாறிக்கொண்ட எங்கள் இதயம் போல . . .
அதில் கூட அவள் பெயரோ
என் பெயரோ பொறிக்கப்படவே இல்லை . . .
ஆனாலும் அவள் பெயரை
முணுமுணுக்காத நேரமே இல்லை. . .
அறியாத வயசு
வலி தெரியாத உன் நினைவுகள்
வசந்தமாய் உணர்ந்தேன் . . .
பள்ளி படிப்பு முடிந்து பிரிந்தாலும்
நம் உறவுக்கு பிரிவில்லை என்ற ஒரு உணர்வு . . .
இன்று வகுப்பின் கடைசி நாள்
நம் சந்திப்பின் கடைசி நாள்
என்று தெரியாமல் கூட
உன் கண்ணை வெகு நேரம்
பார்த்து ரசித்து கொண்டிருதேன் . . .
யார் கண்பட்டதோ . . .
கல்லூரி படிப்புக்கு நீயும் நானும்
வேறு வேறு திசைகளில்
அப்போது தொடர்பு கொள்ள வசதியும் இல்லை
கடிதத்தை தவிர . . . ஆனால் அதும் முடியவில்லை . . .
பிரிவோம் என்று தெரியாமல் கூட
நம்மை பிரித்து வைத்தது காலம் . . .
காலம் உருண்டது . . .
கல்லூரி படிப்பை முடித்து
உன்னை காண
மிதி வண்டி எடுத்து வந்து
உன்னை காணாமல்
கண்கலங்கி நின்ற உணர்வுகள்
இன்று நினைத்தாலும்
கண்கள் கலங்கி தானடி போகிறது . . .
இன்று
நீயும் நானும் தூரம் தூரம் தான் . . .
ஆனால் . . .
அந்த ஒத்தையடி பாதையில்
நம் காதலின் கால்தடம் அருகருகே
அழியாத சுவடாய்
இருந்து கொண்டு தான் இருக்கிறது . . .
- ரகு, சென்னை
More From
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications