பைநாகப்பாம்பே பைந்தமிழை இழித்தாய்
சென்னை: தற்போதைய அரசியல் நிலைமை குறித்து நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர் தமிழ்நாடுடையோன் அனுப்பிய கவிதை

பைநாகப்பாம்பே பைந்தமிழை இழித்தாய்
ஐநாகம் அழித்தார் அவரே தமிழ்தான் படித்தார்
ஆழ்வார் தமிழ் படிக்க ஆழ்ந்தார் திருமாலே
பாரளந்த தமிழை பழித்ததனால் விடப்பாம்பே
கார்மேனிச் செங்கண் தமிழ் கருப்பன் மாயோன்-உன்
தூர்மேனி மேலினி தூங்கமாட்டான்
ஆயிரம் நாவோடு அநியாயப் பொய் பேசாதே
துர் நாற்றம் துரத்த துளபம் எடுப்போம் தூர ஓடிவிடு!
பதற்றத்துடன் இனி பற்ப நாபன் அரவே
உன்மேல் இனி அறவே படான்
நஞ்சாய் நீ கக்கியதே நால்வேதம் என்றவன் நாடறியச் சொல்லிவிட்டான்
நரித்தந்திர நால்வருணம் என்னும் புறத்தோல் உரிக்க உரிக்க வளர்வதினால்
எரித்தே விடுவதென்று எம்பெருமான் முடிவெடுத்தான்
நீல கண்டனுமே உன்னை கண்டம் விட்டு துண்டம் செய்ய கங்கணம் கட்டிவிட்டார்
முப்பாட்டன் முறுகனுமே முறுக்கேறி வருகின்றான்
பாம்பே தப்பாட்டம் ஆடாதே மயில் பசிக்கு இரை செய்வார்
உடையவரும் உன்னை திருத்தத்தான் நினைத்தார்
உடையாரும் முன்னம் உடைவாளெடுத்து எச்சரித்தார்
படையல் என எங்கள் அன்னை தமிழ்ப் பாவை படித்தார்
பறைஎடுத்து ஆண்டாள் உங்கள் பசப்பை எல்லாம் உடைத்தார்
நூலைப் படித்தவர்கள் நுட்பம் தெளிகின்றார்
வாலை நறுக்கி வதம் செய்ய வாளை எடுக்கும் முன்
வாலை சுருட்டி மீண்டும் வனத்துக்கே ஓடிவிடு
- தமிழ்நாடுடையோன்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications