குகனாக.. வீரபாகு தேவனாக... சாணக்கியனாக... "சிற்றன்னை" சசிகலாவுக்கு புகழாரம் சூட்டும் 'நமது எம்ஜிஆர்'
ஜெயலலிதாவை புகழ்ந்து பக்கம் பக்கமாக கவிதைகள் வடித்த நமது எம்ஜிஆர் சித்ரபாகு இப்போது 'சின்னம்மா' புகழ்பாடுகிறார்.
சென்னை: காவிய ராமனுக்கு குகனாக, கந்தனுக்கு வீரபாகுத் தேவனாக சந்திரகுப்த மெளரியருக்கு சாணக்கியனாக "சிற்றன்னை" சசிகலாவும் ஜெயலிதாவுக்கு உறுதுணையாக இருந்தார் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் புகழாரம் சூட்டியுள்ளது.
டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேட்டில் ' சித்திரகுப்தன்' எழுதியுள்ள கவிதை:
அரசரோ,
அதிபரோ,
அண்டை நாட்டுத்
தூதரோ...
அன்னை
தெரசாவோ,
அமெரிக்க
அர்ணால்டோ...
வேதா இல்லம்
தேடி வந்து

தன்னைச்
சந்திக்கும்
பிரமுகர்களிடம்
அம்மா
அறிமுகம்
செய்தது
ஒருவரை
மட்டும்தான்...
அவர்
சின்னம்மா
என்கிற
தமது
உடன்பிறவா
சகோதரியை
மட்டும்தான்!
முப்பத்தைந்து
ஆண்டுகளில்
அம்மா
உறவென்று
கருதியதும்
உதவியென்று
வேண்டியதும்
தனது
பெற்றநல்
தாயாக
உற்ற நல்
தோழியாக
உயிராகக்
கருதியதும்,
இன்ப துன்பம்
யாவிலும்,
மகிழ்ச்சி
துக்கம்
அனைத்திலும்,
ஏற்ற- இறக்கம்
எதனிலும்,
சமமாக ஏற்று
சரிபங்கு ஆற்றிட
சந்தர்ப்பம் தந்து
சகோதரியாய் ஏற்றதும்,
வான் தொட்ட
வாகைக்கு
உதவிடும் ஏணியாகவும்,
நெருப்பாற்றில் நீந்திட
உதவும் தோணியாகவும்,
தன்னலம்
துறந்த
ஞானியாகவும்,
நற்றன்னை
நாளெல்லாம்
நேசித்தது
நம்
சிற்றன்னையை
மட்டும்தான்!
விடியல்
தோறும்
அம்மாவின்
விழிகள் தேடியதும்,
வேதனையில்
ஆறுதல் தேடி
அம்மா
நாடியதும்...
தாயின் மடியாய்
தலைசாய்ந்து
தம்மை
இளைப்பாறியதும்
சின்னம்மா
என்னும்
சுற்றங்களைத்
துறந்து வந்த
சுமைதாங்கியிடம்
மட்டும்தான்!
அன்றைய
கலையுலக
தாரகை
அரசியல் உலகின்
தேவதையாய்
அவதாரம்
எடுக்க
காவிய ராமனுக்கு
குகனாக,
கந்தனுக்கு
வீரபாகுத் தேவனாக,
சந்திரகுப்த மௌரியருக்கு
சாணக்கியனாக
சந்தியாத் தாய்
புதல்வியின்
சரித்திரப்
புகழ்மிக்க வெற்றிகளுக்கு
சந்தனமாய்
கரைந்ததும்,
சளைக்காது
உழைத்ததும்
சின்னம்மாதான்!
இதற்காக
எதிர்கொண்ட
வசவுகள்,
ஏற்றுக்கொண்ட
சிறைவாசங்கள்,
இமயப்
பேரியக்கமாய்
இலைகொண்ட
இயக்கம்
வாகைகள்
சூழவே
வலம் வர
ஊண் உறக்கம்
மறந்த
தியாகங்கள்...
சகலத்தையும்
கூட்டிப் பார்த்தால்
இதற்கு
சரித்திரத்தில்
நிகரில்லை!
சமகாலத்தில்
ஈடில்லைதானே!
AIADMK mouthpiece hails Sasikala who is trying to take over the party.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications