யாருக்கு யார் எதிரி ?
பூமிக்கு எதிரியல்ல...
மனித குலத்துக்கு எதிரி!
மனிதனின் பூதாகார எதிரியாக
கண்ணுக்கே தெரியாத ஓர் உயிரி!
தன்னை மட்டுமே முன்னிறுத்தி
சுயநலத்துக்காக மற்ற
எல்லா உயிர்களையும்
கொஞ்சமும் நினைக்காமல்
மனிதமே இல்லாமல்
நடந்து கொண்ட மனிதனை
முடக்கிய வைரஸ்!

மூச்சுவிட முடியாமல்
தவித்த பூமியை
வெகு காலம் கழித்து
சுவாசிக்க வைத்த வைரஸ்!
குடும்பத்தார் முகம்கூட பாராமல்
ஓடியோடி
எந்திரகதியில் பயணித்தவரை
ஆசுவாசம் கொண்டு
முகம் காண வைத்த வைரஸ்!
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும் -
இது சான்றோர் வாக்கு!
கடிவாளம் பூட்டாத
மனிதனின் செயல்களுக்கு
அவன் தன் நிலை உணர
பலி வாங்கி பழி வாங்கிய
ஒரு உயிர்!
அதுவும் சிற்றுயிருக்கும் கீழான
நிலையில் ஓர் உயிரி!
உலகையே நகர முடியாமல்
முடக்கிப்போட்ட கொரோனா
இனியேனும் மனிதன் உணர்வானா
இல்லை மீண்டபின்
முன்னிலும் அதிகமாய்
இந்நிலை வென்ற
செருக்கில் ஆடிடுவானா?
- ஆகர்ஷிணி
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications