துபாயில் நாளை கணையாழி தசரா அரபு சிறப்பிதழ் வெளியீட்டு விழா!

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில், கணையாழி தசரா அரபு சிறப்பிதழ் வெளீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது.

கணையாழி மற்றும் இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை இணைந்து இதை நடத்தவுள்ளன. விழா நாளை காலை 10 மணிக்கு துபாய், ஜமைரா, அல் சபா பார்க் அருகே உள்ள எமிரேட்ஸ் ஆங்கிலப் பள்ளியில் நடைபெறுகிறது.

Kanayazhi Arabu special edition to be released tomorrow in Dubai

துபாய் ரெடா கெமிக்கல்ஸ் நிறுவன பிசினஸ் மேனேஜர் ஜெ. சோமாஸ்கந்தன் வரவேற்பு ஆற்றுகிறார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர், முனைவர் ம. இராசேந்திரன் தலைமை தாங்குகிறார்.

சிறப்பிதழை வெளியிட்டுச் சிறப்புரையாற்றுகிறார் துபாய் டிடிஎஸ் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் ஜெயந்தி மாலா சுரேஷ். இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை நிறுவனர் கே. செல்வகுமார் சிறப்பிதழைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்.

இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை அறங்காவலர் கே.எஸ்.சீனிவாசன், துபாய் எஸ்என்ஜி குழும நிறுவனங்களின் பொது மேலாளர் எஸ்.எஸ். மீரான், சவுதி தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் சுரேஷ் பாரதி, இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை அறங்காவலர் மு.கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் சிறப்புரை வழங்குவார். தஞ்சாவூர் கிங்ஸ் பொறியியல் கல்லூரி செயலாளர் முனைவர் உரு. அரசவேந்தன் நன்றியுரை நிகழ்த்துவார். அனைவரும் வருமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+