வணக்கம் மகாராஜா!
Subscribe to Oneindia Tamil
வணக்கம் மகாராஜா!
உன்னை வணங்குவது
சட்டமாக்கப்பட்டிருக்கிறது!
கருணை மணாளனே!
நீ குழந்தைகளை வளர்க்கிறாய்!
பூனைகளை வளர்க்கிறாய்!
சகலமும் உன்னால்
வளர்க்கப்படுகின்றன!

பசியில்
குழந்தைகள் விரல் சுவைக்கின்றன...
விரல்களை
வாயிலிருந்து பிடுங்கிவிடுகிறாய்!
குழந்தைகளின் ஆரோக்கியம்
முக்கியம் என்கிறாய்!
பூனைகள் மீனுண்ணக்கூடாது என்கிறாய்!
மீன்களும் பாவம் என்கிறாய்!
குழந்தைகளின் பாலை
மீன்களின் தொட்டியில்
சிரித்துக்கொண்டே ஊற்றுகிறாய்!
கோமாதாக்கள்
உன் அரண்மனையின்
ஆராய்ச்சிமணிகளில்
ஆனந்த ஊஞ்சலாடுவதாக
செய்தி பரவுகிறது...
நல்லபடியாக
காருண்ணியத்தோடு
எல்லாம் நடந்துகொண்டிருப்பதாக
உனக்கு மேலானவனை
நீ வணங்குகிறாய்...
உன் சாம்ராஜ்யத்தின்
வானளாவிய வெற்றிகளாக
வண்ண நீரூற்றுகள்
பீறிட்டு வழிகின்றன
நன்றி மகாராஜா!
உனக்கு நன்றி நவில்வதும்
சட்டமாக்கப்பட்டிருக்கிறது!
- பழநிபாரதி
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications