அழகு தமிழ் முதல் அணு வரை போதித்தவர்களை அனுதினம் கொண்டாடி மகிழ்வோம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நமது வாசகர் இரா. சங்கர், அபுதாபியிலிருந்து எழுதி அனுப்பி வைத்துள்ள கவிதை...

ஆசிரியர்கள்!

புத்தக சுமைகளை
இறகுகளாக்கி தந்தவர்கள்!

teachers day celebrated in india

கரும்பலகையில்
வெண்மையாய் கரைந்து
வானவில் தந்தவர்கள்!

தவ வாழ்வு வாழ்ந்து
வாழ்வை வெல்ல
வெற்றிவேல் தந்தவர்கள்!

விட்டில் பூச்சிகளையும்
விண்வெளி பறவைகளாக்கும்
வித்தையறிந்தவர்கள்!

மெழுகாய் உருகி
நம் வாழ்வில்
ஞானதீபம் தந்தவர்கள்!

இடியாய் அடித்தாலும்
தீயாய் சுட்டாலும்
அருள்மழைப் பொழியும்
ஆசிரியர்கள்
கருணை மேகங்களே!!!

பாதம் பணிவோம்
வாழக்கை வேதம்
தந்தவர்களை!!!

அழகு தமிழ் முதல்
அணு வரை
போதித்தவர்களை
அனுதினம் கொண்டாடி மகிழ்வோம்!

இரா.சங்கர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+