தண்ணீர் என்னும் உயிர் நீர்
-சுஜாதா ஜெயராமன்
நம்மை காக்க
நாம் காக்க வேண்டியது தண்ணீர்
பணத்தை தண்ணீராக செலவழி என்று
சிலேடையாக சொல்ல முடியாது இன்று
தண்ணீரை பணம் போல் சிக்கனமாக செலவழி
என்னும் நிலைமைதான் உலகெங்கும்
தண்ணீர் இல்லாமல் மக்கள் படும் அவதிகளை
இருண்ட கண்டம் கண்டு புரிந்து கொள்வோம்

அந்நாளில் நீர்நிலைகளை
உயிரென காத்தனர் மன்னர்
இந்நாளில் ஏரிமூடி வீடு கட்டி
பணம் பார்க்கிறார் பொன்னர்
இருக்கின்ற நீர் நிலைகளில்
நெகிழி குப்பை கூளம்
தெருவெங்கும் நெகிழி குடம்
வரிசையான கோலம்
வெட்டிய பசுமை இட்ட சாபம்
கொட்டிடும் மழை வேண்டி யாகம்
வெட்டிய பசுமையால்
பூமியே வெப்பமாகும் சோகம்
வெப்பமும் வறட்சியும் கைகோர்த்து
உயிரை நீரின்றி வாட்டுகிறது ஒன்று சேர்த்து
இப்போதாவது விழித்து கொள்வோம்
நீரின்றி பசுமையில்லை
பசுமையின்றி நீரில்லை
முடிவெடுப்போம் மரம் வளர்ப்போம்
இருக்கும் நீராதாரத்தை உயிராக காப்போம்
இல்லையேல் நாளை தண்ணீருக்காக
மானிடர் ஒருவரையொருவர்
அடித்து கொல்ல நேரும்
தண்ணீர் என்றும் உயிர் நீர்
வீணாகும் ஒவ்வொரு சொட்டு நீரும்
எங்கோ ஓர் உயிரை காக்கும்
இருக்கும் நீரை
சிக்கனமாய் செலவு செய்வோம்
நீர் வளம் பெருக்குவோம்
நீர் வளம் காப்போம்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications