மூன்று அங்குலப் பிரவாகம்

சூரியன் உச்சிக்கு ஏறப் போவுது, இன்னமும் நான் குளிச்சு முழுகி ஒண்ணும் பண்ணாமத்தான் கிடக்கேன். நல்ல நாளு அதுவுமாஇப்படி ஒரு சோதனையா? என்ன செய்ய? காவிரிய விட்டுப் போட்டு இப்படிப் பட்டணத்துல வந்து கிடக்கறேனே. வரமாட்டேன்னு சொல்லச் சொல்ல கூட்டியாந்துட்டானே இந்தப் பய. என்னத்தப் பட்டணம் போ. குடிக்கத் தண்ணியில்லே. பெரிசாபேருதான். பொண்டாட்டியும் சம்பாதிக்கிற பவுசு, பயலுக்கு என்னைக் கூட்டியாந்து காட்ட இங்க என்னடான்னா ..
நாளுங் கிழமையுமா குளிக்காம கிடக்கறேனே. மூனு நாளா ஆச்சும்மா இந்த அடிக்கிற பம்பு ஒடஞ்சு போயி. இதோ அதோன்னுஇன்னும் ஒர்க் பண்ணாமக் கிடக்கு.
இன்னக்கி ஆடி பதினெட்டு. ஆடிப் பெருக்குன்னு சொல்லுவோமில்ல்ை. அந்த நாளு நாங்கன்னா காலைல மூனு மூனரைமணிக்கே எந்திரிச்சு வீடு வாசக் கழுவி நிலப்படி கழுவி பொட்டு வச்சு .. இப்படி எம்மா வேலை கெடக்கும்? இங்கஎன்னடான்னா ஆறரை மணிக்கு கொறஞ்சு எவளும் எந்திரிக்க மாட்டேங்கிறாளுக. ராத்திரி இருட்டினப்ப தானா வந்துஅடையுதுங்க குருவி காக்காக் கணக்கா. காலைலே எந்திரிச்சு, அரக்கப் பரக்க ஆக்கி அவிச்சுப்புட்டு கொட்டிக்கிட்டு,கட்டிக்கிட்டு களுவிக்கிட்டு போயிடுதுங்க. இதுங்கு எப்படீன்னா தொலயட்டும், என்னையுமில்ல இந்தக்கோலத்துக்காக்கிட்டான் இவன்.
வீடு வாசக் கழுவி பொட்டு வக்க முடியாம, தண்ணியில்லாமக் கூடக் கெடக்கே. ஒரு பொட்டுத் தண்ணி இல்லயம்மா தாயே வீடு.வீடா இது, ரெண்டு ரூம்பு, ரெண்டே ரூம்பு. ஊர்ல பம்பு செட்டு ரூம் கணக்காக அடுப்பங்கரை, களுவிவிட்டாக சலேன்னு தண்ணிபோற மாதிரிக் கட்ட மாட்டாங்க? அலசினமா, களுவினமா தண்ணி போச்சா, ஊஹும். கையகல அடுப்பங்கரையைக் களுவஅத்தினி சாமானையும் எடுத்து அடுத்தாப்ல கொண்டு போடணும். தண்ணிய இழுத்து இழுத்துத் தள்ளித் தள்ளி அடுத்த ரூம்பிலதள்ளி விட்டு விட்டு அத்தை வாசலுக்குத் தள்ளணும்.
அத்தோட போச்சா? ரோட்டை விட வீடு கீள இருக்குது. வாசல்ல நிலையத் தேங்கிக் கிடக்குந் தண்ணி எல்லாமா தெரு வாசல்லஇருந்து டப்பா டப்பாவா இறச்சு சர் சர்ன்னு சத்தத்தோட தெருவிலே கொட்டணும். ரெண்டு எட்டு வேகமாக நடக்க முடியுமா?
என்ன செய்ய இப்படி வந்து மாட்டிக்கிட்டேனே. ஊர்ல எல்லா அததுங்க வேலைக்கு லீவு எடுத்துக் கிட்டு, குளிச்சு நல்ல துணிகட்டிக்கிட்டு சோறு கட்டி எடுத்துக்கிட்டு பூவாங்கிக் கிட்டு கருவளை வாங்கிக் கும்மாளமா காவிரி அம்மாவைப் பார்க்கபோவோமே, விளாக் கணக்கா!
ஆனி மாசம் மட்டும் நல்லாத்தானே இருக்கும் ஊரு கிணறுக்குள்ளேயே தண்ணியோட. ஆனா ஆனிக் காற்று அடிக்க ஆரம்பிச்சஉடனேயே தண்ணியெல்லாம் மளமளன்னு உறிஞ்சிக்கிட்டுப் போக ஆரம்பிக்குமே. கெணத்தைக் குனிஞ்சு ஒவ்வொரு நாளும்பாக்கப் பாக்க பகீர்ருந்தான். ஒரு அடி, ரெண்டடித் தண்ணியும் வத்தி காஞ்சு கிடக்கப் போவுதுன்னு நெனக்கும்போதே .. பயிர்பச்சைப் பத்தியெல்லாம் கவலை வந்துடுமே.

முன்னெல்லாம் இப்படியா? வருசம் முளுக்கத் தண்ணி ஓடின தடமில்ல இது. இந்தம்மா இப்படி காஞ்சா கெடப்பா? ஆனாஅதெல்லாம் பளங் கதையாப் போச்சு. மத்த நாளெல்லாம் ஓடாம சித்த நாள் ஒடற காவிரியாப் போச்சு. பாலத்திலேருந்துபார்த்தாக்கா பச்சுன்னு வாசனையும் வெத்தலயுமா, நெல்லுங் கரும்புமா, எள்ளு உளுந்துமா மாத்தி மாத்தி கெடக்கற வயல்லேவேல செஞ்ச நாளெல்லா கனவாய் போச்சு. இப்ப என்னடான்னா மொறத் தண்ணி விட காலமில்ல. காவிரியிலே இருந்தாஅரசலாத்திலே இல்லே, அதில இருந்தா இதில இல்லைன்னு ஆயிப் போச்சுத் தண்ணி.
அதவுடு, இப்போ என்ன செய்யறது? வீடு வாசக் கழுவி விடலேன்னாலும் போவுது நான் குளிக்க வேண்டாமா? யாரைப் போயிதண்ணி கேக்க? யாரு கிடக்காக மதியத்திலே சுத்திரலும் எல்லா பங்களாக்காரங்க. ஒண்ணா வெளியப் போயிடுவாங்க.இல்லாட்டி கதவை இளுத்து அடச்சிக்கிட்டு படம் பாக்காறாங்க. கொஞ்சம் எட்டி ரெண்டு வூட்டுக்காரங்க இருக்கிறாங்க.அதுங்க சித்த என்னன்னா ஏன்னுன்னு கேட்கும் நம்பளப் போல. அப்பப்ப அங்க போயி இந்தப் பட்டண வெய்யிலுக்குஜில்லுன்னு தண்ணி வாங்கிக் குடிப்பேன். அந்தம்மா கூட சில வேளைக்கு எங்க வூட்டுக்குத் தண்ணியக் கூட கெட்டி பண்ணிக்கொடுக்கும். கட்டித் தண்ணியோட சாதாத் தண்ணியையும் கலக்கி வச்சுக் குடிச்சாக்கா நெஞ்செரிச்சலுக்கு நல்லா இருக்கும்.அதுங்கக் கிட்டத்தாம் போயி ரெண்டு கொடந் தண்ணி வாங்கிட்டு வரணும்.
ஆனி மாசம் அடிக்கிற காத்தக் கண்டு எரிச்சப்பட்டாலும் ஆடி மாசமானா அந்தக் காற்று தானே தண்ணியை இளுத்துக்கிட்டுவருது. இல்லென்னா இந்தக் காஞ்ச மணல்ல தடவிக்கிட்டே வரதுக்குள்ளாற பாதித் தண்ணி உள்ளார போயிடும்ல. என்னசெய்யறது, எல்லாக் கெணறுமே நெல்லுக் கொட்ற தொட்டி மாதிரி ஈரமில்லாம ஆயிப் போவுதே இப்பெல்லாந்தான்.இங்கிருக்கிற பட்டணத்துக்காரங்களுக்கு மழையும் சனியந்தான், காத்தும் சனியந்தான், வெய்யிலும் சனியந்தான்.எல்லாத்தையுமில்லே திட்டிக் கிட்டே கிடக்குதுங்க. ரெண்டு தூத்தப் போட்டா ஒண்டிக்கிதுங்க சக்கரை பொம்மை கணக்கா.
முன்னெல்லாம் ஆடி மாசம் வெள்ளம் தானே வரும். இப்பெல்லாம் இந்த வருசம் ஆடிப் பண்டிகைக்குத் தண்ணி எத்தனை நாள்முன்ன வரும்? பதினெட்டு அன்னைக்கான வருமா அப்படீன்னு தவசு கிடக்கிறோமே!
ஏதோ மவராசியா நல்லா இரு தாயி ஒம் புண்ணியத்தால ரெண்டு கொடந் தண்ணி கெடச்சுது. குளிச்சு முளுவலாம்.
இந்த வருசம் எப்படியோ? ஒவ்வொரு வருசம் மாதிரியே தண்ணி வருமா பண்டிகை கொண்டாடுவோமான்னு ஏங்கிக்கிட்டுகெடக்கோ சனங்க? அம்மா தாயே இந்த வருசம் கிழடு, கிண்டு, பிஞ்சு, எளசு அப்படீன்னு எத்தையும் பலி வாங்காம பயிற்பச்சையை பாளாக்காம பதவிசா விடு தாயி. இந்த நாள்ளே உனக்கு வெளக்கேத்தி கருவளை விட்டு பூப்போட்டுக் கும்பிடுறோம்தாயி. ஆனாலும் இப்படியுந்தான் ரெண்டு வருசமானாக்கா பலி வாங்காம இந்தம்மா விடறதேயில்லை. இந்தப்பசங்களுக்குத்தான் தண்ணியக் கண்டுட்டா கண்ணு மண்ணுத் தெரியாம கெடந்து ஆடுதுங்க.
பாலத்து மேலருந்து குதிக்கிறானுங்க. காஞ்ச அம்மா மடியிலேருந்து லாரி லாரியா மணல் எடுத்து கெணறாட்டமா ஆக்கிப்போட்றானுங்க, இந்த லாரிக்காரப் பசங்க. எங்க சுழல்லு எங்க மேடு எதுவும் தெரியமாட்டேங்குதே. இதுக் கெடயிலகல்லுக்கட்டி வெட்டியிருக்கிற கெணருங்க வேற இங்க ஒண்ணு அங்க ஒண்ணுன்னு ஏதானாலும் மதகில தாம் போயிஉடலெடுக்கணும். சாக்கடை அடச்சிக்காட்டாப்பில எங்க எங்க இருந்த ஆடு, மாடு, மனுசங்க, மர மட்டைங்க எல்லாமா அங்கவந்து அடச்சிக்கிட்டு உப்பிக் கெடக்குமோ? தூக்கி வந்து போட்டு அள வேண்டியதுதான்.
இதோ, மூணு மணிக்கு ஆளைக் கூட்டி வாரேன்னு சொல்லக் காலைல போன மவந்தான். இப்ப வரைக்கும் வரவில்லை. மணிநாலு இருக்குமா? வெருட் வெருட்டென்று ஒத்தையிலே உட்கார்ந்து என்ன செய்ய? அவுத்தப் போட்டத் துணி கூட துவைக்கமுடியல்லையே. துணி துவைக்க பாத்திரந் தேய்க்க அப்படின்னு எத்தனைக்குப் போய் ஒத்தர்க்கிட்டதண்ணி வாங்கறது. இப்படிபளசெல்லாம் நெனச்சுக்கிட்டு பட்டணத்திலே கிடக்க வேண்டியதுதான்.
போன வருசம் இப்படித்தான் ...

இந்த நாள்ல சப்பரம் இளுத்துக்கிட்டு போவமில்ல பசங்க நம் ஊர்லே அததுங்க வசதிக்கேப்ப வெல கொடுத்து வாங்குதுங்க.கோயிலய்யிரு மவனுக்கு அவரே சப்பரம் செஞ்சு கொடுத்தாரில்லே. எப்பவுமே அப்படித்தானே. மவனுக்கும், அப்பனைப்போலயே சோடனை எல்லாந்த் தெரியும். நல்லா சோடிச்சு, சப்பரத்தைத் தெரு முழுக்க இழுத்துக்கிட்டு ஓடும். கல்பூரங்காட்டி,பூப்போட்டு எல்லாம் நெசமாலுமே செய்யும். அந்தப் பிஞ்சை இழுத்திக்கிட்டுப் போயிட்டாளே இந்தத் தாயீ. எங்கெங்ககெடக்கற மட்டையோட மதகிருந்து இழுத்துக்கிட்டு எடுத்துப் போட்டு வண்டியிலே எடுத்தாத்தாங்களே.
பயிரை உயிரா காக்கற தாயிம்மா நீயி. அளிச்சுப் போடாதேன்னல்ல வேண்டிக்குவோம். அந்தி சந்தி கூடற நேரமாயிப் போச்சு.இன்னம் மவனைக் காணமே, மொட்டு மொட்டுன்னு எம்மா நாழி கெட்டதறது? காவிரி அம்மா இன்னக்கி என்னை என்னமாவக்கப் போறாளோ தெரியல்லியே .. அம்மாடி தாயி, ஒரு வளியா மவன் வந்துட்டான் ஆளுங் கூட்டித்தான்.
ஏம்பா ராசா, இன்னக்கி வெளக்கு வைக்கறதுக்குள்ளாற சரி பண்ணிப்புடுவீங்களா? நல்ல நாளு அதுவுமா தண்ணியில்லாமஆகிப் போச்சே ..!
பிடி போயிடுச்சு, அது பாச்சு, இது போச்சு, எதுவுமே புரியல்ல்ை. மொத்தமா பணம் மட்டும் போச்சு நூறு ரூவாக்கும் மேல.
இருட்டிப் போயிடிச்சு. மவனும் அந்தப் பையனுமா சரி பம்பு ஒர்க் பண்ணிட்டுப் போயாச்சு. பிடி இறுக்கி அடிச்சுப் பார்த்தேன்.பம்பிலே தண்ணி வருது. கொஞ்சங் கெட்டியா இருக்குது. தண்ணிய எப்ப பாப்பம்னல்லே ஆயிப் போச்சு. செத்த கடைக்கு ஓடிப்போயிட்டு வரேன். ஒரு முளம் பூவும் வெத்தள பாக்குமா.
பம்பைச் சுத்திப் பூவைக் கட்டி வச்சுட்டேன். பம்பு கீளே வெளக்கு ஏத்தி வச்சுப்புட்டேன். வெத்தலையும் பாக்கையுமா வச்சுபம்பிலேருந்து தண்ணி அடிச்சு சுத்தினேன். அம்மா தாயே நீ தாண்டி காவிரி எனக்கு. தண்ணீ நீதானேடி தர்றே. மூனு நாளாஉஞ்சத்தமில்லாம தண்ணியில்லாம திண்டாடிட்டேம்மா. இனிமே இப்படி ஆக்காதே தாயே, அப்படின்னு மண் மேல விழுந்துகெடக்கறேன்.
- க்ருஷாங்கினி([email protected])
இவரது முந்தைய படைப்புகள்:
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications