வழக்கத்துக்கு மாறாக.. 3.5 கிமீ தூரம் ரன்வேயில் ஓடிய விமானம்.. விபத்துக்கு காரணம் இதுதானா? வெளியாகும் தகவல்கள்
அகமதாபாத்: குஜராத் அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் விபத்துக்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி, ''உந்துசக்தி கிடைக்கவில்லை, விமானம் விழப்போகிறது'' என்று கடைசியாக பேசியிருப்பதும், வழக்கத்துக்கு மாறாக நீண்ட தூரம் ரன்வேயில் ஓடியதும் தெரியவந்துள்ளது. வழக்கமாக 2.5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டுமே இத்தகைய விமானங்கள் ரன்வேயில் ஒடி டேக் ஆப் ஆகும்.
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற இந்த விமான விபத்து உலகம் முழுவதும் அதிரவைத்தது. விமான விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, விமான விபத்துக்கு முன்பாக விமானிகள் பேசிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

ரன்வேயில் 3.5 கிமீ ஓடிய விமானம்
விமான கட்டுப்பாட்டு அமைப்பிடம் உள்ள தரவுகளை வைத்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் வழக்கத்திற்கு மாறான டேக் ஆப் தான் விமான விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாமோ என்ற கவலை எழுந்துள்ளது. அதாவது, விபத்துக்குள்ளான டிரீம் லைனர் விமானர் அகமதாபாத் விமானதளத்தில் இருந்த 3.5 கிலோ மீட்டர் தொலைவுக்கும் ஓடி பிறகு டேக் ஆப் ஆனதாக சொல்லப்படுகிறது.
வழக்கமாக 2.5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டுமே இத்தகைய விமானங்கள் ரன்வேயில் ஒடி டேக் ஆப் ஆகும். முழு தொலைவும் ஓடியதால், விமானத்துக்கு போதிய உந்துசக்தி கிடைக்காமல் போயிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், கருப்பு பெட்டி தரவுகளை ஆய்வு செய்த பிறகே அது உறுதி செய்யப்படும்.
சரியான காரணம் என்ன?
இது தொடர்பாக விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், "டேக் ஆப் ஆவதற்கு முன்பாக எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. ஓடு பாதை மாற்றம், உந்து சக்தி குறித்தோ எந்த ஒரு கோரிக்கையும் வைக்கப்படவில்லை. வானிலை தெளிவாக இருந்தது. இதனால், தெளிவாக பார்க்க முடிந்தது. வெப்ப நிலையில் அதிகமாக இருந்தாலும் கூட விமானத்தை இயக்குவதற்கான வரம்புக்குள் இருந்தது.
எனவே இதை வைத்து பார்க்கும் போது விமானம் டேக் ஆப் ஆகும் போது வழக்கமான அளவீடுகள் அனைத்தும் சரியாக இருந்தது என்பதையே காட்டுகிறது" என்று அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. விமானத்திற்கு போதிய உந்து சக்தி கிடைக்கவிலை. கீழே விழுகிறது. மே டே, மே டே என்று என்று விமானிகள் உரையாடல்கள் விவரமும் வெளி வந்துள்ளன. ஏடிசி தரவுகளை ஆய்வு செய்த போலீசாரும் இந்த எச்சரிக்கை கால் குறித்த விவரங்களை உறுதி செய்துள்ளனர்.
உந்து சக்தி கிடைக்காததே காரணம்
ரன்வேயில் விமானம் முழு தூரமும் ஓடிய பிறகே டேக் ஆப் ஆனது ஏன் என்பது குறித்து தற்போது விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். விமானம் மேலெழும்ப தாமதம் ஆனதற்கு போதிய உந்து சக்தி கிடைக்காததே காரணமாக இருக்கும் என்பதை முதல் கட்ட மதிப்பீடுகள் பரிந்துரைக்கின்றன. உந்துசக்தி கிடைக்காததற்கான காரணங்களை விமான தரவுகள், விமானிகள் அறை குரல் பதிவுகள் ஆகியவற்றில் இருந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications