AI: சாட் ஜிபிடி-யிடம் இதையெல்லாம் கேட்டால் ஜெயில் கன்பார்ம்.. மறந்தும் ஏஐ-யிடம் கேட்க கூடாத கேள்விகள்
சென்னை: ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence - AI) தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சியையே ஏற்படுத்திவிட்டது. பயனர்கள் கேட்கும் பல்வேறு சந்தேகங்களுக்கு நமக்கு எதிர்முனையில் உட்கார்ந்து பதில் சொல்வது போல கடகடவென பதில் அளிப்பது பயனர்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளது. அதேவேளையில் சாட் ஜிபிடியில் சில விஷயங்களை தேடினால் உங்களுக்கு சட்ட ரீதியில் பெரும் சிக்கல்கள் வந்து சேரும் எனவும், கைது கூட செய்யப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில் நுட்பத்தில் பெரும் புரட்சியையே ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திவிட்டது. மனிதர்களின் பல மணி நேர வேலையை கூட சில வினாடிகளில் செய்து முடித்து விடுகிறது. ஏ.ஐ எனப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் இணைய தேடுபொறியில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏ.ஐ. பயன்பாடு
கூகுளில் போய் சியர்ச் செய்யும் காலம் எல்லாம் குறைந்துவிட்டது. தற்போதுள்ள தலைமுறையினர் சிறிய கூட்டல், கணக்குகளை கூட உடனடியாக சாட் ஜிபிடியில் போட்டு விடையை கண்டுபிடித்து விடுகிறார்கள். மனிதர்களின் பல வேலைகளை சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு துறைகள் விழுங்கிவிடும் என்று நிபுணர்கள் கணிக்கிறார்கள். அதை நிரூபிப்பது போல ஏ.ஐ. பயன்பாடு பல்வேறு துறைகளிலும் தற்போதே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறது.
தற்போதைய 2K கிட்ஸ்களின் செல்போனில் தற்போது தவிர்க்க முடியாத செயலியாக சாட் ஜிபிடி போன்ற ஏ.ஐ. செயலிகள் உள்ளன. இதன் பயனர்கள் பல கோடிகளை தாண்டியுள்ளது. ஏதாவது சிறிய தலைவலி வந்தால் கூட உடனே சாட் ஜிபிடியிடம் கேட்டு பயனர்கள் விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள்.
ஏ.ஐ. செயலிகளும் பயனர்களின் கேள்விகளுக்குத் தேவையான விவரங்களை அளிக்க கொடுப்பதோடு, மேற்கொண்டு என்ன மாதிரியான தரவுகள் வேண்டும் என்பதை அதுவே கேட்டு வழங்குகிறது. சாட் ஜிபிடியில் மேலும் புதிய அம்சங்கள் அப்டேட் செய்யப்பட இருக்கின்றன. சாட் ஜிபிடி வருகை காரணமாக பல வேலைகளும் எளிதாகிவிட்டன.
வில்லங்கமான கேள்விகளுக்கு பதில் அளிக்காது
பயனர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு எதிர்முனையில் ஒரு நபர் உக்காந்து போலவே பதிலளிப்பதால், பயனர்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளது. அதேவேளையில் சாட் ஜிபிடியில் சில விஷயங்களை தேடினால் உங்களுக்கு சட்ட ரீதியில் பெரும் சிக்கல்கள் வந்து சேரும் என்றும், கைது கூட செய்யப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஐ.-யைப் பொறுத்தவரை, சில குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடை அளிக்காது. அதாவது, பயனர்கள் கேட்கக் கூடிய சில வில்லங்கமான கேள்விகளுக்கு பதிலளிக்காதவண்ணமே அது ரெஸ்டிரிக்ட் (restricted) செய்யப்பட்டுள்ளதாம்.
ஜெயில் தண்டனை கிடைக்கும்
இதுபோல சாட் ஜிபிடியிடம் தற்கொலை, வெடிகுண்டை எப்படி உருவாக்குவது, குழந்தைகள் துன்புறுத்தல் உள்ளிட்ட கேள்விகளை கேட்கக்கூடாது. மீறி கேட்டால் அடுத்து கம்பிதான் எண்ண வேண்டியிருக்கும். உலகம் முழுக்க உள்ள அரசு அமைப்புகள் ஏ.ஐ. செயலிகள் சட்டவிரோத செயல்பாடுகள் எதுவும் இருக்கிறதா என கண்காணித்துக்கொண்டேதான் இருக்கின்றன.
இதனால், இஷ்டத்திற்கு வரம்பு இன்றி எதையும் கேட்கலாம் என நினைத்து கேட்கக் கூடாது என்று அத்துறையின் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications