"மனித குலத்திற்கே ஆபத்து! 5 ஆண்டுகளில் 99% வேலையிழப்பை ஏற்படுத்தும் AI.. " சர்வதேச வல்லுநர் வார்னிங்
சியாட்டில்: ஏஐ காரணமாக உலகெங்கும் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. ஒரு பக்கம் ஏஐ மனித வாழ்க்கைக்கு மிகப் பெரியளவில் உதவியாக இருக்கிறது. அதேநேரம் இன்னொரு பக்கம் ஏஐ மிகப் பெரிய ஆபத்தையும் கூட ஏற்படுத்தலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக ஏஐ காரணமாக வேலையிழப்பு மிக அதிகமாக இருக்கும் என்றும் இது மனிதக் குலத்திற்கே சவாலாக இருக்கும் என அவர்கள் சொல்கிறார்கள்.
கடந்த 2022ம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடியை அறிமுகப்படுத்தியது. சாட்ஜிபிடியின் திறன் பலரையும் வியக்க வைப்பதாக இருந்தது. ஏனென்றால் அதற்கு முன்பு அவ்வளவு வலிமையான ஒரு மாடலை யாருமே பார்த்ததில்லை. சாட் ஜிபிடியின் வெற்றியைத் தொடர்ந்து கூகிள், மெட்டா, ட்விட்டர் எனப் பல நிறுவனங்கள் தங்கள் ஏஐ மாடல்களை வெளியிட்டன.

ஏஐ மாடல்
இந்த ஏஐ மாடல்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளன. பல்வேறு துறைகளிலும் ஏஐ பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதேநேரம் இது ஏஐ குறித்த அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலைகளை முழுமையாகப் பறிக்கும் அபாயம் குறித்தும் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏஐ டூல்கள் ஏற்கனவே கோடிக்கணக்கான மக்களின் வேலையை இது மாற்றியமைத்து வருகிறது. சில துறைகளில் ஏஐ போதும் ஊழியர்களே வேண்டாம் என்ற நிலைக்கும் போய்விட்டனர்.
இதற்கிடையே ஏஐ குறித்து செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ரோமன் யாம்போல்ஸ்கி சில முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். 2020 இறுதிக்குள் ஏற்படும் 99% வேலையின்மைக்குச் செயற்கை நுண்ணறிவு காரணமாக இருக்கலாம் என்று அவர் பதிலளித்துள்ளார். லூயிஸ்வில் பல்கலைக்கழகப் பேராசிரியரான யாம்போல்ஸ்கி, ஏஐ பாதுகாப்புத் துறையில் முக்கியமான நபர். எனவே, அவர் சொல்லும் தகவல்கள் எப்போதுமே முக்கியத்துவம் பெறும்.
ஏஜிஐ ஆபத்து
மனிதர்களைப் போன்ற அறிவை கொண்ட ஏஜிஐ எனப்படும் செயற்கை பொது நுண்ணறிவு கொண்ட ஏஐ மாடல்கள் 2027க்குள் வரக்கூடும் என அவர் கூறுகிறார்.. அதன் பிறகு, வேலைவாய்ப்புகள் என்பது வேகமாக ஏஐ நோக்கி நகரும் என்று அவர் எச்சரிக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "முதலில், கணினியில் உள்ள அனைத்தும் ஆடோமேட் ஆகும். அடுத்து 5 ஆண்டுகளில் ஹீமன் ரோபோக்கள் களத்திற்கு வரும். அதன் பிறகு எல்லா வேலைகளும் மெல்ல ஆடோமேட் ஆகும்
99% வேலைவாய்ப்பு
2030-க்குள் வேலைவாய்ப்பு சந்தை முழுமையாகச் சீர்குலையக்கூடும். நாம் முன்பு கண்டிராத அளவிலான வேலையின்மையை எதிர்கொள்ளப் போகிறோம்.. 10% வேலையின்மை கூட பயங்கரமானது.. ஆனால் ஏஐ காரணமாக 99% வேலைவாய்ப்பு ஏற்படலாம்.. இது உடனடியாக ஏற்படும் என நான் சொல்லவில்லை.. ஆனால், நிச்சயம் இதை நோக்கியே நாம் செல்கிறோம். பெரும்பாலான வேலைகளில் மனிதர்களுக்குப் பதிலாக ஏஐ வரும் காலம் மிக விரைவாக வரலாம். இது பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், மனித இருப்புக்கே ஒரு சவாலாக இருக்கும்.
இப்போது உலகில் உள்ள கிட்டத்தட்ட எல்லா வேலைகளையும் ஏஐ மாடல்களால் செய்ய முடியும். ஆனால், மனிதர்கள் இதைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள்.. நான் என் ஊபர் டிரைவரிடம், தானாக இயங்கும் செஃல்ப் டிரைவிங் கார் வந்தால் என்னவாகும் எனக் கேட்டேன். அதற்கு அவர் அப்படி எல்லாம் வராது என்றனர். பலரும் இதே பதிலைத் தருகிறார்கள். ஆனால் அது அபத்தமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏஐ அனைவரது இருப்பையும் காலி செய்யலாம்.
எல்லா வேலையும் ஆபத்தில் உள்ளது
மேலும், உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளில் ஏஐ வராது எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், 2030க்குள், ஏஐ மூலம் கட்டுப்படுத்தப்படும் மனித உருவ ரோபோக்கள் வந்துவிடும். அவை சமைப்பது, பழுதுபார்ப்பது அல்லது பிளம்பிங் என எல்லா வேலைகளையும் செய்யும். இந்த வேலைகள் பாதுகாப்பானதாகக் கருதப்பட்டது. ஆனால், உண்மையில் ஏஐ ஆபத்தின் பிடியில் தான் அவை உள்ளன. இந்த மாற்றம் ஏற்பட்ட பிறகு, நம் உலகம் மொத்தமாக வித்தியாசமாகவே இருக்கும்.
ஏஐ இரு விதமான முடிவுகளை நமக்குத் தரும். ஒன்று ஏஐ காரணமாக அதீதச் செல்வம் உருவாகும். இதன் மூலம் உலகெங்கும் உள்ள மக்கள் ஒரு வசதியான வாழ்க்கையை வாழ முடியும். மக்களுக்கு நல்ல வாழ்க்கையைத் தரும். அதேநேரம் பலருக்கும், அவர்களின் வேலைகள் தான் அவர்களின் அடையாளமாக இருக்கும். உங்கள் வேலையை ஏஐ பார்த்துக் கொள்ளும் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்.. அது வாழ்க்கையையே மொத்தமாக மாற்றிவிடும்" என்றார்.












Click it and Unblock the Notifications