"எச்சரிக்கை.." AI சீக்கிரமே வெடிக்கும்.. யாராலும் தடுக்கவே முடியாது.. பில் கேட்ஸ் கொடுத்த வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்: சர்வதேச அளவில் பல ஏஐ நிறுவனங்கள் படுவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேநேரம் இது ஒரு பப்பிள் போல உருவாகிவிட்டதாகவும் இது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்றும் வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் உரிமையாளருமான பில் கேட்ஸ் இது தொடர்பாகச் சில முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.

இப்போது உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் தொழில்நுட்பமாகச் செயற்கை நுண்ணறிவு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சர்வதேச அளவில் பல ஆயிரம் கோடி முதலீடுகள் ஏஐ பக்கம் சென்றுள்ளன. இப்போது அனைத்து முதலீட்டாளர்களுமே ஏஐ சார்ந்த நிறுவனங்களிலேயே முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Bill Gates Warns of AI Bubble Many Startups Will Not Survive the Hype as Overvaluation Risks Loom

ஏஐ

அதேநேரம் இந்த ஏஐ பப்பிளாக உருவெடுத்து வருவதாகவும் அது எப்போது வேண்டுமானாலும், வெடிக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அதாவது ஏஐ நிறுவனங்களில் அளவுக்கு அதிகமான முதலீடுகள் போய் இருப்பதால் அது ஆபத்தாக மாறலாம் என எச்சரித்துள்ளனர். இதற்கிடையே மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், இது குறித்துத் தெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பில் கேட்ஸ்

அபுதாபியில் நடந்த நிகழ்வில் பேசிய அவர், அதிக மதிப்பீடுகளைக் கொண்ட பல ஏஐ நிறுவனங்களால் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க முடியாது என்றும் இது ஏஐ பப்புளை உருவாகக்கூடும் என்றும் தெரிவித்தார். அவர் மேலும், "AI துறை மிகவும் போட்டி நிறைந்ததாக மாறிவிட்டது. ஏராளமான நிறுவனங்கள் ஒரே மாதிரியான யோசனைகளுடன் வருகிறது. அந்த நிறுவனங்களில் முதலீடுகளும் வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஏஐ ரேஸில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வெற்றியாளர்களாக வெளிவரும்.. பல நிறுவனங்களால் தங்கள் மதிப்பீடுகளுக்கு நியாயம் கற்பிக்க முடியாது.

சீக்கிரம் வெடிக்கும்

பல நிறுவனங்களுக்கு வரும் காலத்திலும் இதே மதிப்பு இருக்கும் என சொல்ல முடியாது. எனவே, முதலீட்டாளர்கள் ஒரு மாபெரும் சரிவுக்குத் தயாராக இருக்க வேண்டும். சில ஏஐ நிறுவனங்கள் மிக அதிக வேல்யூவேஷன்களை கொண்டுள்ளன. ஒட்டுமொத்த மார்கெட்டை விடச் சில ஏஐ பங்குகளின் மதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. இதை நாம் ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏஐ நல்லது

அதேநேரம் இங்கு நான் இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். AIஐ ஒரு தொழில்நுட்பமாக வரவேற்கிறேன். அது மனிதர்களுக்கு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். இது மிக முக்கியமான விஷயம். சமூகத்தில் அதன் தாக்கம் மிக பெரியதாக இருக்கும். குறிப்பாகச் சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் AI அர்த்தமுள்ள மாற்றங்களைக் கொண்டுவர முடியும். AI-ன் நன்மைகள் நிஜமானவை மற்றும் தவிர்க்க முடியாதவை.

AIஐ சுற்றி நடக்கும் பிஸ்னஸ் மற்றும் முதலீடுகளையே நாங்கள் எச்சரிக்கிறோம். நிறுவனங்கள் சரியான பிஸ்னஸ் மாடல்களை வைத்திருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். 2026க்கு பிறகு AI நிறுவனங்கள் பொறுப்பான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.. AI என்ற பெயரை வைத்து கொண்ட சும்மா வேல்யூவேஷன்களை அதிகரித்து முதலீடுகளைப் பெறுவதை மட்டும் நோக்கமாக வைத்திருக்கக்கூடாது. அதை ஒரு நல்ல பிஸ்னஸ் மாடலாக இந்த நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+