10 ஆண்டுகளாக திணறிய டாக்டர்.. 10 நிமிடத்தில் நோயை கண்டுபிடித்த சாட்ஜிபிடி! அசத்தும் AI டெக்னாலஜி
டெல்லி: இந்தக் காலத்தில் ஏஐ வேற லெவலில் முன்னேறி வருகிறது. மனிதர்கள் செய்ய முடியாத விஷயங்களைக் கூட நொடிகளில் செய்து காட்டி வருகிறது. அப்படித் தான் இங்குப் பெண் ஒருவர் 10 ஆண்டுகளாக ஒருவித உடல்நிலை பாதிப்பை எதிர்கொண்டு இருக்கிறார். மருத்துவர்களால் அவருக்கு என்ன பிரச்சனை என்பதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனால், சாட்ஜிபிடி அந்த நபரின் பாதிப்பை நொடிகளில் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டதாம்.
ஏஐ நமது உலகை வேகமாக மாற்றி வருகிறது. பல்வேறு துறைகளிலும் ஏஐ நமக்குப் பெரியளவில் கை கொடுத்து வருகிறது. ஏஐ செயல்பாடுகள் நமக்கு வியப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் குறித்துத் தான் நெட்டிசன் ஒருவர் தனது ரெட்டிட் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

சாட்ஜிபிடி
பல மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், நரம்பியல் நிபுணர்களால் கண்டுபிடிக்க முடியாத 10 ஆண்டுக்கால உடல்நிலை பாதிப்பிற்கான காரணத்தை சாட்ஜிபிடி நிமிடங்களில் கண்டுபிடித்தாக அவர் தெரிவித்துள்ளார். "மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத 10+ வருடச் சிக்கலைத் தீர்த்து வைத்த சாட்ஜிபிடி" எனற தலைப்பில் அந்த ரெட்டிட் யூசர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு மேலாகவே தனக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததாகவும் எவ்வளவு சிகிச்சை எடுத்தும் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அந்த நபர் தெரிவித்தார். இதனால் தனக்குப் பல ஆண்டுகள் தொடர்பே இல்லாத அறிகுறிகள் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
10+ ஆண்டுகள் சிரமம்
இது தொடர்பாக அவர் மேலும் தனது ட்விட்டரில், "MRI, CT ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, லைம் நோய்க்காகப் பரிசோதனை என எல்லாம் செய்தேன். நாட்டின் உயர்தர மருத்துவமனைகளில் ஒன்றில் சிகிச்சை பெற்றேன்.. நரம்பியல் நிபுணர் உட்படப் பல சிறப்பு மருத்துவர்களிடம் போய்விட்டேன். ஆனாலும், தெளிவான மற்றும் உறுதியான சிகிச்சையை யாரும் தரவில்லை. இதனால் 10+ ஆண்டுகள் நான் பெரும் சிரமத்தை எதிர்கொண்டேன்.
உடலில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இறுதியில் எனக்கு ஹோமோசைகஸ் A1298C MTHFR பிறழ்வு இருப்பது தெரியவந்தது, இது உலகெங்கும் உள்ள மக்களில் 7-12% வரை உள்ளவர்களைப் பாதிக்கிறது. எனக்கு இருந்த பாதிப்பைக் கண்டுபிடிக்க உதவியது டாக்டர் இல்லை.. ஏஐ தான்.
நொடிகளில் கண்டுபிடித்த சாட்ஜிபிடி
நான் எனது அறிகுறிகள், இதுவரை கிடைத்த டேட்டா முடிவுகளை சாட்ஜிபிடியில் எண்டர் செய்தேன். சாட்ஜிபிடி எனது அனைத்துத் தகவல்களையும் மருத்துவப் பரிசோதனை முடிவுகளையும் ஆய்வு செய்து எனக்கு இந்த B12 அளவு சாதாரணமாக இருந்தாலும், பிறழ்வு இருக்கலாம் எனக் கூறியது. சாட்ஜிபிடி கூறிய தகவல்களுடன் மருத்துவமனைக்குச் சென்றேன்.
AIஐ நம்பவே வேண்டாம்.. அடிக்கடி பொய் தகவல்களை தருது! எச்சரிப்பது சாட்ஜிபிடி ஓனர் சாம் ஆல்ட்மேன்
நெட்டிசன்கள்
அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார், மேலும் நடந்ததை அவரிடம் கூறினேன்.. அறிகுறிகளுக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கும் என்ற சாத்தியக்கூறை கருதவில்லை என அவர் கூறினார். இதன் காரணமாகவே பிறழ்வுக்குப் பரிசோதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்" என்றார். அதன் பிறகே மருத்துவர் இந்த பிறழ்வுக்கு ஏற்ற சிகிச்சையை ஆரம்பித்துள்ளார். இப்போது இரு மாதங்களில் வேகமாகச் சீராகி வருவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்தச் சம்பவம் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருப்பதாக நெட்டின்கள் கூறி வருகிறார்கள். இது குறித்து ஒருவர், "மனிதர்கள் செய்ய முடியாததை மீண்டும் AI செய்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.. அதேபோல மூன்றாவது நபர், "மருத்துவத் துறை தொழில்நுட்ப உலகத்திற்கு இணையாக முன்னேற வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
பலரும் சாட்ஜிபிடியை பாராட்டி வருகிறார்கள். நிலைமை கைமீறி இருந்தால் பல ஆண்டுகள் தீவிரச் சிகிச்சை எடுக்க வேண்டி இருந்திருக்கும் இதில் இருந்து சாட்ஜிபிடி காப்பாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications