உலக தலைவர்கள் மாநாட்டில் சீனா போடும் பிளான்.. அதிநவீன ரோபோ மூலம் பெரிய சம்பவம்! இதை எதிர்பார்க்கல

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: இந்தக் காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ வேகமாக வளர்ந்து வருகிறது. பல துறைகளில் ஏஐ ஆதிக்கமும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே உலக தலைவர்கள் பலரும் பங்கேற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரோபோவை களமிறக்கியுள்ளது சீனா! இந்த ஏஐ ரோபோ குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!

சீனாவின் தியான்ஜின் நகரில் நாளை ஆகஸ்ட் 31ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தொடங்குகிறது. இதுவரை இல்லாத வகையில் இந்தியா, ரஷ்யா, ஈரான், துருக்கி எனச் சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

China SCO Summit to Showcases AI powered Xiao He Advanced Humanoid Robot with Emotional Recognition

ரோபோ

புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்குச் சீனா அளிக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், மாநாட்டைப் பற்றி செய்தி சேகரிக்கும் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்களுக்கு உதவ சியாவ் ஹே (Xiao He) என்ற மனித உருவ ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளனர். சியாவ் ஹேக்கு பல மொழிகள் தெரியுமாம். இதன் மூலம் அந்த ரோபோவால் சர்வதேச செய்தியாளர்களுடன் உரையாட முடியும்.

வரவேற்கும் ரோபோ

மாநாட்டிற்கு முன்னதாக தியான்ஜினில் பேசிய இந்த ரோபோ, ஷாங்காய் உச்சி மாநாட்டிற்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட அதிநவீன ஏஐ உதவியாளர் என்று தன்னை தானே அறிமுகப்படுத்திக் கொண்டது. அந்த ரோபோ மேலும் கூறுகையில், "நான் சியாவ் ஹே, 2025 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஏஐ உதவியாளர். நான் ஒரு சிறப்பு ரோபோ.. பல மொழி ஆதரவு உட்பட பல்வேறு திறன்களைக் கொண்டுள்ளேன்" என்றது.

அதிநவீனத் திறன்கள்

மேம்படுத்தப்பட்ட எமோஷ்னல் அல்காரிதம்கள், தகவமைப்பு கற்றல் தொகுதிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் சியாவ் ஹே வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊடகங்கள், உள்நாட்டுப் பத்திரிகையாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் இடையே தெளிவான தகவல்தொடர்புக்கு இது உதவுகிறது. இந்த ரோபோ சீன, ரஷ்ய மற்றும் ஆங்கில மொழிகளில் பயிற்சி பெற்றுள்ளது. இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து சுமார் 3,000 பத்திரிகையாளர்கள் பங்கேற்கிறார்கள். இவர்கள் அனைவரையும் சியாவ் தான் வரவேற்க உள்ளது.

சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து 2001இல் நிறுவப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, இப்போது உலகின் மிக பெரிய பிராந்திய அமைப்புகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இப்போது உறுப்பினர்களாக உள்ளன. பெலாரஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் மங்கோலியா ஆகியவை பார்வையாளர் நாடுகளாகத் தொடர்கின்றன.

ஷாங்காய் மாநாடு

இது தவிர இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பங்கேற்க இந்தோனேசியா, மலேசியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளும் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பியுள்ளன. இது சீனாவின் விரிவடையும் ராஜதந்திரத் தொடர்புகளைக் காட்டுகிறது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஈரானிய அதிபர் மசூத் பெசேஷ்கியன் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

ஜப்பானில் இரண்டு நாள் அதிகாரப்பூர்வச் சுற்றுப்பயணத்தில் இருக்கும் பிரதமர் மோடி, அதை முடித்துக் கொண்டு அப்படியே நேரடியாக ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்கச் சீனா செல்கிறார். மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரை நேரில் சந்திக்க மோடி திட்டமிட்டுள்ளார். இப்படி உலக தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் தான் சீனா தனது அதிநவீன ஏஐ ரோபோ களமிறக்கி உலக நாடுகளின் கவனத்தைப் பெற உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+