இனி AI வந்தாலும் பிரச்சனை இல்லை! மத்திய அரசு வழங்கும் இலவச ஏஐ படிப்புகள்.. சேருவது எப்படி?
டெல்லி: ஏஐ பயன்பாடு காரணமாக இப்போது வேலைவாய்ப்பு சந்தை மாறி வரும் நிலையில், மத்தியக் கல்வி அமைச்சகம் ஸ்வயம் இணையதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் இந்த ஏஐ படிப்புகளின் சிறப்பம்சம் என்ன.. இதில் உள்ள பாடங்கள் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ பற்றியே பேச்சு இருக்கிறது. எல்லாத் துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வேலைவாய்ப்பு சந்தையும் கூட மிக வேகமாக மாறி வருகிறது. இன்றைய மாணவர்கள் ஏஐ டூல்களை படித்து கற்றுக் கொண்டால் மட்டுமே நாளை வேலை கிடைக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

ஏஐ படிப்புகள்
இதற்கிடையே மத்தியக் கல்வி அமைச்சகம் ஸ்வயம் இணையதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான படிப்புகளை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே, மாணவர்கள் மத்தியில் ஏஐ திறன்களை மேம்படுத்துவதாகும். பல துறைகளிலும் ஏஐ முக்கியத்துவம் பெற்று வருவதால், இந்தத் துறையில் மாணவர்களைத் தயார்ப்படுத்தப் புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முழுக்க முழுக்க இலவசமாகும்.
ஸ்வயம் இணையதளத்தில் இப்போது ஐந்து இலவச AI படிப்புகள் வழங்கப்படுகிறது. AI/ML பைத்தான் பயன்பாடு, AI உடன் கிரிக்கெட் அனலிட்டிக்ஸ் , இயற்பியலில் AI, கணக்கியலில் AI மற்றும் வேதியியலில் AI ஆகிய ஐந்து படிப்புகள் வழங்கப்படுகிறது.
பைத்தான்
AI/ML பைத்தான் பயன்பாடு (AI/ML Using Python) என்ற இந்தப் பாடத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றலின் அடிப்படைகள் குறித்த பாடங்கள் இருக்கிறது. இதில் புள்ளியியல், கணிதம், ஆப்டிமைசேஷன் மற்றும் டேட்டா விஷுவலைசேஷன் ஆகியவை பைத்தான் மொழியை மையமாகக் கொண்டு கற்பிக்கப்படுகின்றன. இதன் கால அளவு 36 மணிநேரம். முடிவில் ஒரு தேர்வு நடத்தப்படும்.
அடுத்து AI உடன் கிரிக்கெட் அனலிட்டிக்ஸ். இது சென்னை ஐஐடி பேராசிரியர்களால் வடிவமைக்கப்பட்டதாகும். பைத்தான் பயன்படுத்தி விளையாட்டு போட்டியின் தரவுகளை எப்படிப் பகுப்பாய்வு செய்யலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. கிரிக்கெட்டை உதாரணமாகக் கொண்டு இந்தப் பாடத்தில் அனைத்தும் விளக்கப்பட்டுள்ளது. இதன் கால அளவும் 25 மணிநேரமாகும். இதிலும் முடிவில் ஒரு வினாடி வினா கேள்வி போல ஒரு தேர்வு இருக்கும்.
இதர படிப்புகள்
இயற்பியலில் AI (AI in Physics) என்ற இது மெஷின் லெர்னிங் மற்றும் நியூரல் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி இயற்பியல் சிக்கல்களைத் தீர்ப்பது எப்படி என்பதைக் காட்டுகிறது. நிஜ வாழ்க்கை உதாரணங்கள் மூலம் இதில் எளிமையாகப் பாடகங்கள் சொல்லித் தரப்படுகிறது. இதன் கால அளவு 45 மணிநேரமாகும்.
கணக்கியலில் AI (AI in Accounting): வணிக மற்றும் மேலாண்மை மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட இப்பாடம், கணக்கியலில் AI எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை விளக்குகிறது. இதன் கால அளவு 45 மணிநேரம். முடிவில் சான்றிதழ் தேர்வு நடத்தப்படும்.
வேதியியலில் AI (AI in Chemistry): சென்னை ஐஐடி வழங்கும் இந்தப் பாடம் வேதியியலில் AI மற்றும் பைத்தானை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைச் சொல்லித் தருகிறது. எதிர்வினைகள், கேமிக்கல் ரியாக்ஷன்கள் ஆகியவை குறித்த பாடங்கள் இதில் இருக்கும். இதன் கால அளவு 45 மணிநேரமாகும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications