ஆபீசில் வாரம் 2 நாள்தான் இனி வேலை பார்க்க வேண்டியிருக்கும்.. பில்கேட்ஸ் டாப் 5 கணிப்புகள் இதோ
வாஷிங்டன்: ஏஐ காரணமாக ஆட்டோமேஷனை என்பது விரைவாக நடந்து வருவதைச் சுட்டிக்காட்டிய பில் கேட்ஸ், அடுத்த 10 ஆண்டுகளில் ஏஐ காரணமாக இரண்டு நாள் வேலை செய்தால் போதும் என்ற சூழல் உருவாகும் என்று பில் கேட்ஸ் தெரிவித்தார். ஏஐ துறையில் நாம் அடையும் முன்னேற்றம் மனித உழைப்பின் தேவையைக் கணிசமாகக் குறைக்கும் என்று குறிப்பிட்ட அவர், மருத்துவம் மற்றும் கல்வி போன்ற துறைகளிலும் ஏஐ தாக்கம் கணிசமாக இருக்கும் என குறிப்பிட்டார்.
இப்போது நாம் எங்குப் பார்த்தாலும் ஏஐ தான் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏஐ செய்யக்கூடிய செயல்களைப் பார்த்தாலே நமக்கே ஒரு நொடி தலை சுற்றுவதாகவே இருக்கிறது. இதற்கிடையே ஏஐ வரும் காலத்தில் எப்படி இருக்கும்.. இதன் மூலம் வரும் காலத்தில் நாம் வேலை செய்யும் முறை எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்த தகவல்களைப் பிரபல தொழிலதிபரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில் கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.

பில் கேட்ஸ்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஏஐ தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்ட ஒன்று. இது இப்போது நமக்கு இருக்கும் பெரும்பாலான பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கிறது. இப்போது பல இடங்களில் நாம் போதுமான மருத்துவர்கள் இல்லை.. போதுமான மனநல நிபுணர்கள் இல்லை என்கிறோம். ஏஐ இந்த பிரச்சினைகளைத் தீர்க்கும். ஆனால், அத்துடன் சேர்ந்து வேறு பல மாற்றங்களையும் கொண்டு வரும்" என்றார்.
கணிப்பு 1- இரண்டு நாள் வேலை செய்தால் போதும்
கடந்த பிப்ரவரி மாதம் ஒளிபரப்பான "தி டுநைட் ஷோ" என்ற நிகழ்ச்சியில் பில் கேட்ஸ் இந்த கருத்துகளைக் கூறியிருந்தார். அது இப்போது திடீரென இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. வரும் காலத்தில் வேலை எப்படி இருக்கும் என்பது குறித்த கேள்விக்கு பில் கேட்ஸ், "வரும் காலத்தில் வேலை எப்படி இருக்கும் தெரியுமா.. அப்போது நாம் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் மட்டும் வேலை செய்ய வேண்டும்..
இதன் மூலம் நாம் நமக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யலாம். அதில் தேவையான நேரத்தைச் செலவிடலாம்.. எனவே, இது (ஏஐ) எனக்குப் பிடிக்கிறது. ஆனால், என்ன நடக்கும் என்பது குறித்து எனக்கும் தெளிவாகத் தெரியாது.
முதல்முறை இல்லை
பில் கேட்ஸ் வேலை செய்யும் நேரம் குறைவது குறித்துப் பேசுவது இது முதல்முறை இல்லை. கடந்த 2023ம் ஆண்டிலேயே வேலை செய்யும் நேரம் குறைவது குறித்து பில் கேட்ஸ் பேசியிருந்தார். அதாவது ஏஐ துறைகளின் வளர்ச்சியால் வேலை செய்யும் நாட்கள் 3ஆகக் குறையலாம் என அவர் கூறியிருந்தார். இப்போது அதைத் தாண்டி ஒரு ஸ்டெப் சென்று, வேலை செய்யும் நாட்கள் 2 ஆகக் குறையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணிப்பு 2- எந்த வேலைகள் ஆபத்து
ஏஐ வளர்ச்சியால் வரும் காலங்களில் எந்த வேலை அதிக ஆபத்தில் இருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "உண்மை சொல்ல வேண்டும் என்றால் மற்ற வேலைகளைக் காட்டிலும் சில குறிப்பிட்ட வேலைகள் அதிகம் பாதிக்கப்படலாம். குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களைச் சொல்லலாம். அவர்கள் மாற்றத்திற்குத் தயாராக இருக்க வேண்டும்.
கணிப்பு 3- அறிவாற்றல் இலவசமாகக் கிடைக்கும்
ஏஐ அடுத்த 10 ஆண்டுகளில் படுவேகமாக வளர்ச்சி அடையும். இதன் மூலம் அதிகபட்ச அறிவாற்றல் இலவசமாக அனைவருக்கும் கிடைக்கும். இதன் மூலம் சிறந்த மருத்துவ ஆலோசனையை நாம் எளிதாகப் பெறலாம். மேலும், கல்வி கற்கும் முறையும் ஏஐ மூலம் மேம்பட்ட ஒன்றாக மாறும்.
கணிப்பு 4- எந்த வேலைக்குப் பாதிப்பு இல்லை
அதேநேரம் சில துறைகள் ஏஐ-க்கு அப்பாற்பட்டு இருக்கும். கோடிங் செய்வோர், உயிரியலாளர்கள் (biologists) மற்றும் எனர்ஜி வல்லுநர்கள் ஆகியோருக்கு இதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என நினைக்கிறேன். இவர்கள் ஏஐ உடன் இணைந்தே பணியாற்றும் சூழல் உருவாகும்
கணிப்பு 5- வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும்
வரும் காலத்தில் ஒருவர் வெற்றிகரமாக இருக்கச் சூழலுக்கு ஏற்ப தங்களை தாங்களே தகவமைத்துக் கொள்ள வேண்டும். இன்று வெற்றி கிடைத்துவிட்டது என இருந்துவிடக்கூடாது. நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்" என்று அவர் தெரிவித்தார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications