Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில்
சியாட்டில்: AI கருவிகள் இப்போது உலகை மொத்தமாகப் புரட்டிப் போட்டு வருகிறது. சிக்கலான கோடிங்கை கூட போடும் அளவுக்கு ஏஐ வலிமையாக மாறி வரும் சூழலில், அப்போது ஐடி பொறியாளர்கள் வேலையே இருக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே இந்த கேள்விக்குப் பிரபல ஏஐ கம்பெனியா ஆந்த்ரோபிக் நிறுவனமே சில முக்கிய விளக்கங்களைக் கொடுத்துள்ளது.
இந்த காலகட்டம் சந்தேகமே இல்லாமல் AIஇன் காலகட்டம் எனச் சொல்லலாம். ஏஐ படுவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பெரு நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தில் முதலீடுகளைக் கொட்டும் சூழலில், அதன் வளர்ச்சியும் வேற லெவலில் இருக்கிறது. இதனால் நாம் யோசித்துக் கூட பார்க்காத வேலைகளை ஏஐ டூல்கள் செய்ய ஆரம்பித்துள்ளன.

ஆந்த்ரோபிக்
கடந்த சில வாரங்களாகவே ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் தான்.. ஐடி உலகில் கடந்த சில வாரங்களாகவே இதுதான் பேசுபொருளாக இருக்கிறது. இதன் ஏஐ ஏஜெண்டுகள் என்ற டூல், சிக்கலான கோடிங் வேலைகளைக் கூட எளிதாகச் செய்து முடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
வழக்கமாக ஒரு நிறுவனத்திற்குப் பல மாதங்கள் ஆகும் கோடிங்கை கூட இந்த ஏஐ ஏஜெண்டுகள் சில வாரங்களில் முடித்தன. இந்த ஆய்வு முடிவுகள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இந்த முடிவு வந்தபோது இந்திய ஐடி சந்தை ஆபத்தில் இருப்பதாகவும் உடனடியாக அது தன்னை அப்கிரேட் செய்து கொள்ள வேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு, அரவிந்த் சுவாமி எனப் பலரும் எச்சரித்தனர்.
வேலையிழப்பு?
மேலும், கோடிங் முழுக்க ஏஐ மூலமாகப் போடப்படும் காலம் சீக்கிரமே வரும் எனச் சொல்லப்படுகிறது. அப்படி கோடிங் வேலையை எல்லாம் ஏஐ பார்த்துக் கொண்டால் இந்தியாவில் பல லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகும். மேலும், கோடிங்கை ஏஐ பார்த்துக் கொண்டால் மனிதர்களுக்கு என்ன வேலை என்ற கேள்வி இயல்பாகவே வரும். அதற்கான பதிலையும் ஆந்த்ரோபிக் அளித்துள்ளது. அதாவது AIக்கு வழிகாட்டவும் அதன் செயல்பாடுகளைக் கண்காணிப்பது, நிர்வகிப்பது ஆகியவை ஐடி பொறியாளர்களின் வேலையாக மாறும் என ஆந்த்ரோபிக் தெரிவித்துள்ளது.
மிக முக்கிய கருத்து
முன்னதாக, 2026 சிஸ்கோ AI உச்சி மாநாட்டில் ஆந்த்ரோபிக்கின் தலைமை தயாரிப்பு அதிகாரி மைக் கிரிகர் பேசுகையில், தங்கள் நிறுவனத்தின் AI அமைப்புகள், கிளாட் உதவியுடன் உருவாக்கப்படுவதாகத் தெரிவித்தார். அதாவது கிளாட் AIஐ உருவாக்கும் கோடிங்கை கூட கிளாட் ஏஐ தான் உருவாக்குகிறது எனக் கூறியிருந்தார். அந்தளவுக்கு ஏஐ வளர்ந்துவிட்டது என்பதே அவரது கருத்து . விரைவிலேயே கோடிங் முழுமையாக ஏஐயின் வேலையாகிவிடும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி தெரிவித்திருந்தார்.
என்ன செய்வது
இது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இனி ஐடி ஊழியர்களின் தேவை இல்லாமலேயே போய்விடுமோ என்ற கேள்வி எழுந்தது. அப்போது டெவலப்பர் வேலை என்னவாகும் என்ற கவலைகளும் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கிளாட் கோடின் தலைவர் போரிஸ் செர்னி, "கோடிங் என்பது வேலையின் ஒரு பகுதி மட்டுமே. கோடிங்கை ஏஐ பார்த்தாலும், எதைக் கோட் செய்ய வேண்டும் என்பதை நாம் தான் சொல்ல வேண்டும். வாடிக்கையாளர்களுடன் பேசுதல், மற்ற டீம்களுடன் ஒருங்கிணைந்து வேலை செய்தல் எனப் பல வேலைகளுக்கு ஐடி ஊழியர்களே பொறுப்பாக இருப்பார்கள். அதாவது முடிவு செய்ய ஐடி ஊழியர் இருக்க வேண்டும். பொறியியல் மாறிக்கொண்டிருக்கிறது. நாம் சாதாரண பொறியாளராக இல்லாமல் சிறந்த பொறியாளர்களாக இருப்பது முக்கியம்" என்றார்.












Click it and Unblock the Notifications