குற்றம் நடக்கும் முன்பே கணித்து சொல்லும் AI.! இனி ஒரு தப்பு கூட நடக்காது.. அசத்தும் பிரிட்டன் அரசு
லண்டன்: இப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ ஆதிக்கமே அதிகரித்து வருகிறது. இதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கும் பிரிட்டன், குற்றம் நடக்கும் முன்பே அதைக் கணிக்கும் ஏஐ டூலை உருவாக்கி வருகிறது. இது மட்டும் வெற்றிகரமாக இருந்தால் குற்றங்கள் நடக்கும் முன்பே அதைச் சரியாகக் கணித்துத் தடுக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இப்போது நமது அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறி வருகிறது. ஜாலியாக பேசுவது முதல் கார்ப்பரேட் ஆபீஸ்கள் வரை, எல்லாப் பக்கமும் ஏஐ நமக்கு உதவியாக வருகிறது. இது மருத்துவ ஆராய்ச்சி முதல் போக்குவரத்து அமைப்புகளை ஒழுங்குபடுத்துவது வரை மிகப் பெரிய மாற்றங்களைச் சத்தமில்லாமல் செய்து வருகிறது.

ஏஐ மேப்
இதற்கிடையே பிரிட்டன் அரசு இதை இன்னும் ஒருபடி மேலே எடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது. அதாவது குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், குற்றங்கள் நடக்கும் முன்னரே கணிக்கவும் உதவும் வகையில், ஏஐ அடிப்படையிலான குற்றத் தடுப்பு அமைப்பை உருவாக்கப் பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. இது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் விரிவான, ரியல் டைம் க்ரைம் வரைபடத்தை உருவாக்கும். குற்றங்கள் எங்கு நிகழ வாய்ப்புள்ளது என்பதை இந்த ஏஐ அமைப்பு துல்லியமாகக் கணிக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிறு சம்பவங்கள் பெரிய குற்றமாக மாறுவதற்கு முன், அதிகாரிகள் தலையிட உதவும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட தரவு பகுப்பாய்வு மற்றும் மேப்பிங் முறைகளை ஒருங்கிணைத்து இந்த முறை செயல்படும். போலீஸ் பதிவுகள், உள்ளூர் கவுன்சில்கள் போன்ற பல்வேறு அமைப்புகளில் இருந்து டேட்டாவை எடுத்து அதை வைத்து இந்த ஏஐ மேப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
துல்லியமாக கணித்து சொல்லும்
கடந்த காலங்களில் குற்றங்கள் எங்கே எப்போது நடந்தது என்பதை வைத்தும், மீண்டும் மீண்டும் குற்றம் செய்வோரின் நடத்தையைக் கண்காணித்தும் இந்த லிஸ்ட்டை உருவாக்கப் பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், கத்தி உட்பட வன்முறை தாக்குதல்கள், திருட்டு மற்றும் சமூக விரோத நடத்தை போன்ற குற்றங்களை முன்கூட்டியே கண்டறியும்.
இந்தத் திட்டம் 2030ஆம் ஆண்டுக்குள் முழுமையாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்தத் திட்டத்திற்கு 4 மில்லியன் பவுண்ட்டை பிரிட்டன் அரசு முதலீடு செய்துள்ளது. பல்வேறு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் வல்லுநர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட மாடல்களை ஏப்ரல் 2026க்குள் உருவாக்குவதே இவர்களின் இலக்காக இருக்கிறது.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன
இது குறித்து பிரிட்டன் போலீஸ் அமைச்சர் டேம் டயானா ஜான்சன் கூறுகையில், "இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, குற்றங்களைத் தடுக்கவும், முன்னெச்சரிக்கையாகவும் செயல்பட உதவும் AI டூலை உருவாக்க நாங்கள் முதலீடு செய்கிறோம்" என்றார். இதற்கு முன்பும் பிரிட்டனில் க்ரைம் மேப்கள் இருந்துள்ளன. ஆனால், அந்த மேப்களில் குற்ற சம்பவங்கள் நடந்த பிறகு அது மேப்பில் வரும். ஆனால், இந்த ஏஐ டூல் குற்றம் நடக்கும் முன்பே அதைக் கணித்து மேப்பில் காட்டுமாம்.
இது முதல்முறை இல்லை
அதேநேரம் குற்றத் தடுப்பில் ஏஐ பயன்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல. அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிகாகோ போன்ற நகரங்களில் இதே போன்ற திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டன. இருப்பினும், ஏஐ டூல்கள் எப்போதும் கடந்த கால போலீஸ் டேட்டாவை வைத்தே முடிவெடுக்கும். இதனால் அங்கு ஏஐ டூல்களை பயன்படுத்தும்போது இனப்பாகுபாடு அதிகம் இருக்கிறதாம். மேலும், அதன் வெற்றி விகிதமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் அத்திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதற்காகக் குற்றப் பிரிவில் அனைத்து ஏஐ டூல்களும் தோல்வி என சொல்ல முடியாது. நெதர்லாந்தின் குற்ற அமைப்பு ஓரளவுக்கு நல்ல சக்சஸ் ரேட்டை கொண்டிருக்கிறது. அதேபோல டென்மார்க்கிலும் மோசடி வழக்குகளைக் கையாள்வதில் ஏஐ டூல்கள் முக்கிய பங்காற்றியுள்ளது. இப்படி கலவையான முடிவுகளே இருப்பதால் பிரிட்டன் ஏஐ மேப் எப்படி இருக்கும் என்பதில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications