இனி AI உலகிலும் ஈஸியாக வேலை கிடைக்கும்.. மத்திய அரசு வழங்கும் இலவச AI படிப்புகள்.. சேர்வது எப்படி?
சென்னை: மத்திய கல்வித் துறை அமைச்சகம் தனது ஸ்வயம் தளத்தில் ஐந்து இலவச செயற்கை நுண்ணறிவு (AI) படிப்புகளை வழங்கி வருகிறது. மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள், வேலைக்குச் செல்லும் நபர்கள் என அனைவருமே இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அத்தியாவசியமான ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸ் திறன்களை இதன் மூலம் அனைவரும் கற்றுக் கொள்ளலாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது உலகெங்கும் ஏஐ பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் நமது நாட்டில் இன்னும் பலருக்கும் ஏஐ குறித்த புரிதலும் அதை கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைப்பதில்லை. இதைப் போக்கும் வகையில் மத்திய கல்வித் துறை அமைச்சகம் இலவச ஏஐ படிப்புகளைத் தனது ஸ்வயம் தளத்தில் வழங்குகிறது.

ஏஐ படிப்புகள்
விளையாட்டு, கல்வி, அறிவியல் மற்றும் பைனான்ஸ் எனப் பல துறைகளில் இந்தத் திறன்கள் நமக்குப் பயன்படும். பைதான் புரோகிராமிங் லாங்குவேஜ் மூலம் AI/ மெஷின் லேர்னிங், கிரிக்கெட் அனாலடிக்ஸில் AI, ஆசிரியர்களுக்கான AI, இயற்பியலில் AI, வேதியியலில் AI, மற்றும் கணக்கியலில் AI என 5 முக்கிய படிப்புகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திட்டமும் கேஸ் ஸ்ட்டி மற்றும் ரியல் லைஃப் எடுத்துக்காட்டுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இவை படிப்பதற்கும் எளிமையாக இருக்கும்.
பைதான் மூலம் AI/மெஷின் லேர்னிங்
பைதான் லாங்குவேஜ் மூலம் ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங்கை இது நமக்கு கற்றுத் தருகிறது. டேட்டா விசுவலைசேஷன், அல்ஜீப்ரா, புள்ளியியல் ஆகியவை இதில் அடங்கும். பைதான் லாங்குவேஜ் மூலம் டேட்டா சயின்ஸை இதில் மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள்.
கிரிக்கெட் அனாலடிக்ஸில் AI
விளையாட்டுப் போட்டிகளில் டேட்டா அனாலசிஸை இது நமக்கு எளிமையாகச் சொல்லித் தருகிறது. டேட்டா சேகரிப்பு, பெர்பாமன்ஸ் மற்றும் பைதான் பயன்படுத்திச் சிக்கலான கிரிக்கெட் டேட்டாவை எளிமையாக உடைத்துக் காட்டுவது ஆகியவற்றை இதன் மூலம் கற்றுக்கொள்வார்கள்.
ஆசிரியர்களுக்கான AI
இது ஆசிரியர்களுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். கற்பித்தல் மற்றும் மாணவரை ஈடுபடுத்துவதில் AI-ஐ ஒருங்கிணைப்பதே இதன் நோக்கமாகும். மாணவர்களின் கற்பித்தல் செயல்திறனை மேம்படுத்துவது, கற்றலை எளிமையாக்குவது, வகுப்பறைகளில் மாணவர் திறனை அதிகரிக்க ஏஐ கருவிகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை இது கற்றுத் தருகிறது.
இயற்பியலில் AI
Experimental physicsஐ AI தொழில்நுட்பங்களுடன் இணைப்பதே இதன் நோக்கமாகும். மெஷின் லேர்னிங் மற்றும் நியூரல் நெட்வொர்க்குகளில் நடைமுறை அனுபவத்தை இது வழங்குகிறது.. AI அடிப்படையிலான கருவிகள் பயன்படுத்தி இயற்பியல் சிக்கல்களைத் தீர்க்க இது உதவுகிறது.
வேதியியலில் AI
இளங்கலை மாணவர்களுக்காக இந்தப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாலிகுலார் கணிப்பு, ரியாக்ஷன் மாடலிங் மற்றும் மருந்துத் துறையில் ஏஐ பயன்பாடுகளை இது விளக்குகிறது. ரியல் டைம் தரவுகளுடன் மாணவர்களுக்கு எளிதாகப் புரிய வைக்கும் வகையில் இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பைதான் அடிப்படையிலான நுட்பங்களை இது மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது.
கணக்கியலில் AI
நிதி மற்றும் தொழில்நுட்பத்தை இணைக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. கணக்கியல் துறையில் ஆட்டோமேஷன், மோசடி கண்டறிதல், டேட்டா அடிப்படையில் முடிவெடுத்தல் ஆகியவற்றில் AI கருவிகளை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை இது எளிமையாகச் சொல்லித் தருகிறது.
இப்படி இந்தக் காலத்தில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்துமே ஏஐ படிப்புகளில் வழங்கப்படுகிறது. இதற்கு நாம் எந்தவொரு கட்டணமும் கூட செலுத்தத் தேவையில்லை.. இந்த அனைத்துப் படிப்புகளும் ஸ்வயம் தளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. மேலும் இதைப் படித்து முடிப்பவர்களுக்குச் சான்றிதழும் வழங்கப்படும். ஏஐ படிப்புகளையும் அதன் டூல்களையும் அனைத்துத் தரப்பினருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையே இது நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications