AI பற்றி வாயே திறக்காத ஆப்பிள்.. ஐபோனில் 17இல் "இதை" நோட் பண்ணீங்களா? ஷாக் காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆப்பிள் நிறுவனம் நேற்றைய தினம் ஐபோன் 17 (Apple iPhone 17) சீரிஸை வெளியிட்டது. இப்போது உலகமே AI தொழில்நுட்பம் பின்னால் போகும் நிலையில், ஐபோன் வெளியீட்டு விழாவில் ஏஐ என்ற வார்த்தையே கூட ஆப்பிள் பெரிதாகப் பயன்படுத்தவில்லை. ஐபோனிலும் பெரியளவில் புதிய ஏஐ வசதிகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இதற்கான பின்னணி குறித்தும் காரணம் குறித்தும் நாம் பார்க்கலாம்.

ஆப்பிள் நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 17 சீரியஸை நேற்று வெளியிட்டது. வழக்கமாக வெளியிடப்படும் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 மேக்ஸ் உடன் சேர்த்து இந்த முறை மிகவும் மெல்லிய ஐபோன் 17 ஏர் என்ற மாடலையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. இந்த ஐபோன் வெளியீட்டு விழாவில் இன்னொரு விஷயம் முக்கியமானது.

Why Apple is going slow on Artificial Intelligence barely mentions AI in iPhone 17 Series launch

ஏஐ பற்றி வாய் திறக்கல

அதாவது உலகின் மற்ற நிறுவனங்கள் எல்லாமே தங்கள் செல்போன் புதிய மாடல் வெளியீட்டு விழாவில் ஏஐ குறித்தே பேசிக் கொண்டு இருக்கும். ஆனால், இந்த ஐபோன் 17 வெளியீட்டு விழாவில் ஆப்பிள் நிறுவனம் ஏஐ குறித்து வாயே திறக்கவில்லை.. செயற்கை நுண்ணறிவு என்ற வார்த்தையைக் கூட ஆப்பிள் நிறுவனம் ஓரிரு முறை மட்டுமே குறிப்பிட்டது.

ஏஐ அம்சங்கள் இல்லை

கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட விஷுவல் இன்டெலிஜென்ஸ் மற்றும் ஐபோன் 17ன் முன் கேமராவில் இருக்கும் சென்டர் ஸ்டேஜ் போன்ற அம்சங்களையும் மட்டுமே AI உடன் இணைத்துக் காட்டியது. ஐபோனில் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஏஐ வசதிகள் எதுவும் இல்லை. ஆப்பிள் ஏர்பாட்ஸ் 3 குறித்து பேசும்போது மட்டும் ஏஐ மூலம் இயங்கும் நேரடி மொழிபெயர்ப்பு அம்சம் குறித்த தகவல்கள் மட்டுமே இதில் இடம்பெற்று இருந்தது.

குறிப்பாக ஆப்பிள் டிஜிட்டல் அசிஸ்டெண்ட் சிரியிலும் புதிய ஏஐ வசதிகள் எதுவும் இல்லை. மற்ற செல்போன் நிறுவனங்கள் எல்லாருமே டிஜிட்டல் அசிஸ்டெண்ட் உடன் ஏஐ வசதியை ஒருங்கிணைக்கும் நிலையில், அதைப் பற்றி எந்தவொரு தகவலும் இந்த நிகழ்வில் இடம்பெறவில்லை.

காரணம் என்ன

தொழில்நுட்பத்தில் பெரும்பாலும் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் எப்போதும் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் ஏஐ குறித்து ஏன் வாயே திறக்கவில்லை என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். ஏனென்றால் ஏஐ தொழில்நுட்பத்தில் ஆப்பிள் கோட்டை விட்டுவிட்டது என்பதே உண்மை. ஏஐ இவ்வளவு குறுகிய காலத்தில் இந்தளவுக்கு வளரும் என்பதை ஆப்பிள் நினைக்கவில்லை. இதனால் தான் ஏஐ-இல் ஆப்பிள் நிறுவனம் ஆர்வம் காட்டாமல் இருந்தது.

கூகுள் நிறுவனம் கடந்த மாதம் தான் தனது பிக்சல் 10ஐ மாடலை முழுக்க முழுக்க ஏஐ உடன் ஒருங்கிணைத்திருந்தது. ஆனால், ஐபோன் யூசர்களுக்கு இன்னும் ஏஐ பவர் கொண்ட சிரி கூட கிடைக்கவில்லை. அடுத்தாண்டு தான் ஏஐ சிரி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏஐ-ல் இந்தளவுக்குப் பின்தங்கி இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும் என்றே தெரிகிறது.

அடுத்து என்ன

தற்போது வரை ஆப்பிள் ஐபோனில் மிகவும் அடிப்படையான ஏஐ அம்சங்கள் மட்டுமே இருக்கிறது. மற்ற நிறுவனங்கள் ஏஐ-ல் எங்கேயோ போய்விட்டது. ஆனால், ஐபோன்களில் இன்னும் ரைட்டிங் டூல், ஏஐ போட்டோ (பல குறைபாடுகள் உள்ளன), மொழிபெயர்ப்பு ஆகியவை மட்டுமே இருக்கிறது. மேலும், இன்னும் சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ டூல்களை போல சிரியால் எல்லா கேள்விகளையும் புரிந்து கொள்ளவும் முடிவதில்லை.

அதாவது ஏஐ பிரிவில் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் ஆப்பிள் மிகவும் பின்தங்கி இருப்பது மிக தெளிவாகத் தெரிகிறது. விட்ட இடத்தை பிடிக்க ஆப்பிள் நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளது. கூகுள் ஜெமினி அல்லது வேறு ஏஐ டூல்களை ஆப்பிள் நிறுவனம் தனது கருவிகளில் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது. ஆனால், இதுவரை எதுவும் உறுதியாகவில்லை. இதன் காரணமாகவே ஏஐ என்ற வார்த்தையைக் கூட ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+