சுக்கிரனின் அருளால் லட்சாதிபதியாகும் 4 ராசியினர்.. கட்டு கட்டா பணத்தை அள்ளப் போறீங்க
Malavya raja yoga: மீன ராசியில் மாளவ்ய ராஜயோகம் நாளை உருவாகிறது. மீன ராசியில் சஞ்சாரம் செய்யும் சுக்கிர பகவான் தற்போது மிகவும் வலிமையாக உள்ளதால் மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மீன ராசியில் உருவாகும் ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். பிப்ரவரி 10 ஆம் தேதி அதாவது நாளை மீன ராசியில் மாளவ்ய ராஜயோகத்தால் சிலருக்கு நல்ல நேரம் ஆரம்பமாகும். இந்த யோகத்தால் 5 ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கப் போகிறது. எந்தெந்த ராசியினர் மாளவ்ய ராஜயோகத்தின் பலனை அனுபவிக்கப் போகின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி - சிம்ம ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகம் யோக பலன்களை அள்ளித் தரும். இந்த யோகத்தின் செல்வாக்கால் நாளை முதல் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்களுடைய திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் சாதகமான சூழல் இருக்கும். அனைத்து வேலைகளையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றிகளைப் பெறுவீர்கள். வருமானத்துக்கான புதிய ஆதாயங்கள் உண்டாகும். மனதுக்கு விருப்பமானவர்களுடன் உங்களுடைய நேரத்தை செலவிடுவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மேஷ ராசி- மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரம் சிறப்பானதாக இருக்கும். சமுதாயத்தில், வேலை செய்யும் இடங்களில் உங்களுடைய மதிப்பு மரியாதை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. எடுத்த காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்து அதற்கு பாராட்டைப் பெறுவீர்கள். மூத்த அதிகாரிகள், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பெரிய பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்புள்ளது.
விருச்சிகம் - மாளவ்ய ராஜயோகத்தால் நாளை முதல் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகிறது. அடுத்த வாரத்தில் உங்களுடைய கடின உழைப்புக்கான பலனை அடையும் காலமாக இருக்கும். பணியிடத்தில் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். மன தைரியும் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும்.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகத்தால் செல்வ செழிப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஆசிர்வாதத்தையும் ஆதரவையும் பெறுவீர்கள். அமைதி நிலவும். பிப்ரவரி 10 முதல் 17 ஆம் தேதி வரை உங்களுடைய நேரத்தை உங்கள் துணையுடன் செலவிடுவீர்கள். முதலீடுகள் மூலம் லாபம் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பண வரவுக்குப் பஞ்சமிருக்காது.
மிதுன ராசி - மிது ராசிக்காரர்களுக்கு நாளை முதல் மிகவும் மகிழ்ச்சியான நாட்களாக இருக்கும். இந்த வாரத்தில் பெரிய இலக்கு ஒன்றை அடைவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். நிதி சார்ந்த லாபத்தைக் காணப் போகிறீர்கள். காதல் வாழக்கை மகிழ்ச்சியாகவும், இனியமையானதாகவும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு பெருகும். விட்டுக் கொடுத்துச் செல்வது குடும்பத்தில் நல்லது. பண வரவில் நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் காண்பீர்கள்.












Click it and Unblock the Notifications