திருப்பத்தூர் இளைஞர்களுக்கு குட்நியூஸ்.. வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி முக்கியமான நாள்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் ஏப்ரல் 25 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் நடத்தப்படுவது வழக்கம். அதுபோல சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை.

இதுகுறித்து, திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் நடத்தப்படுகிறது. இதன்படி வருகிற 25 ஆம் தேதி காலை 10 மணிமுதல் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

a-private-sector-employment-camp-will-be-held-in-tirupattur-on-april-25th

காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ள இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், பல முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. தகுதிவாய்ந்த ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். இந்த முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை உடனடியாக வழங்கப்படும்.

இதில், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவா்கள் என அனைத்துவித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தம் செய்யப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+