மகர ராசிக்கு ஆடி மாதத்தில் கதவைத் தட்டும் அதிர்ஷ்ட தேவதை..பணம் கொட்டும்.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம்
ஆடி மாத பலன் 2025: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. அம்மனுக்கு விசேஷமான இந்த அற்புதமான மாதத்தில் கன்னி ராசிக்குள் சூரியன் வருகிறார். அந்த வகையில், இந்த ஆடி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆனி மாதம் முடிந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. கடக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய மாதம் இது. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு விஷேசமான மாதமாகும். கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என்று விழாக்கோலம் பூண்டிருக்கும். குல தெய்வ பழிபாடு, உறவினர்கள் சந்திப்பு என்று கோலகலமாக இருக்கும். ஜூலை 17 முதல் 18 ஆம் தேதி வரையிலான ஆடி மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து காணலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டமாக இந்த ஆடி மாதம் உங்களுக்கு அமையும். அனைத்து விஷயங்களிலும் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சனிக்கிழமை தோறும் தெய்வ வழிபாடுகளைச் செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பு, வெளியிடத்தில் நல்ல முன்னேற்றமும், வளர்ச்சியும் ஏற்படும்.
குடும்பம்
குடும்பத்தில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். கணவன், மனைவி இருவரும் தங்களின் துணையின் உடல்நிலை ஆரோக்கித்தில் அக்கறை செலுத்த வேண்டும். புதன்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது ஏற்றத்தை தரும். சகல தோஷங்களும் நீங்கும். கோதுமை, வெல்லம், கோதுமை தவிடு, கோதுமை ரொட்டியை வழங்குவது நல்ல பலன்களைத் தரும்.
விநாயகர் வழிபாடு
அஷ்டமத்தில் கேது இருப்பதால் விநாயகர் வழிபாடு அடுத்த ஒன்றரை வருடத்துக்கு நன்மையை ஏற்படும். கேதுவின் பாதிப்பில் இருந்து விடுபட காரியசித்தி மாலையை கேட்பது நல்லது. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அதீத கவனமாக இருக்க வேண்டும். உரிய மருத்துவ ஆலோசனைகள் பெற்றுக் கொள்வது பெரிய பாதிப்புகளில் இருந்து காக்கும். வாகனத்தில் செல்லும்போது எந்தவிதமான வித்தைகளும் காட்டாமல் கவனமாக செல்ல வேண்டும்.
தொழில்
தொழிலில் நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அனுகூலங்கள், ராஜயோகம் கிடைக்கும், எதிர்பார்க்காத விஷயங்கள் அனைத்தும் நடக்கும் காலகட்டமாக இருக்கும். வீடு, வேலை செய்யும் இடத்தில் அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. 8 ஆம் அதிபதி 7 இல் அமர்வதால் துணைக்கும் உங்களுக்கும் வாய்த் தகராறு, பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
பயணங்களில் கவனம்
தங்கள் காதலி, மனைவியுடன் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தேவையில்லாதவர்களால் சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் பயணங்கள் சமயத்தில் கவனம் தேவை. கணவன், மனைவி இருவருமே ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் இணக்கமாகச் செல்வது நல்லது. பயண சமயங்களின்போது ஆண்கள் பெண்கள் விஷயத்திலும், பெண்கள் ஆண்கள் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications