ஜென்ம சனியிலும் ஜாக்பாட் அடிக்கும் மீனம் ராசி.. அற்புதமான மாற்றம் ஆன் தி வே.. என்ஜாய்
ஆடி மாத பலன் 2025: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. அம்மனுக்கு விசேஷமான இந்த அற்புதமான மாதத்தில் மீனம் ராசிக்குள் சூரியன் வருகிறார். அந்த வகையில், இந்த ஆடி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆனி மாதம் முடிந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. கடக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய மாதம் இது. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு விஷேசமான மாதமாகும். கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என்று விழாக்கோலம் பூண்டிருக்கும். குல தெய்வ பழிபாடு, உறவினர்கள் சந்திப்பு என்று கோலகலமாக இருக்கும். ஜூலை 17 முதல் 18 ஆம் தேதி வரையிலான ஆடி மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து காணலாம்.

மீனம்
மீனம் ராசிக்காரர்கள் பிள்ளைகளிடம் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் ஆரோக்கியம், பழக்கவழக்கம், வண்டி, வாகனத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடலை சொல்வது கேட்பது அற்புதமான பலன்களைத் தரும். இதயம், கொழுப்பு, அடைப்பு தொடர்பான விஷயங்களில் அதீத கவனம் தேவை.
ஜென்மசனி
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்ற அனைத்து விஷயங்களும் சுலபமாக மாறும். ஜென்ம சனி நடந்து கொண்டிருந்தாலும் உங்களுக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். வண்டி, வாகனம், தொழில் அமைப்பு, பதவி உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பல்வேறு ஏற்றங்கள் கிடைத்தாலும் குடும்பத்தில் தேவையில்லாத குழப்பம் வருவதற்கான வாய்ப்புள்ளது.
குடும்பம்
குடும்பம் தொடர்பான விஷயங்களில் இணக்கமாக, சமாதானமாக செல்வது நல்லது. குடும்பத்தில் வெள்ளை கொடி காட்டிச் செல்வது நல்லது. உங்களிடம் யாராவது கோபப்பட்டாலும் வீண் வாக்குவாதம் செய்வது, பிரச்சனை செய்வதை தவிர்க்க வேண்டும். பூர்வ புண்ணியத்தில் தோஷம் இருப்பதால் அபிராமி அந்தாதியை படிப்பது குடும்பத்தில் காணப்படும் சிக்கல்களைத் தீர்க்கும்.
தெய்வ வழிபாடு
பெரிய சந்தோஷங்கள், தன்னம்பிக்கை ஏற்படும் காலகட்டமாக இருக்கும். புதன்கிழமை தோறும் தெய்வ வழிபாடு செய்வது குடும்பத்தில் நல்ல மேன்மையைக் காண்பீர்கள். அம்பாள், மகாலட்சுமி வழிபட்டால் அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும். 9 தாமரை மலர்களை அம்பாளுக்கு சாற்றி, வீட்டுக்கு இரு தாமரை கொண்டு வந்து பூஜிப்பது விசேஷமான பலன்கள் கிடைக்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும், மகிழ்ச்சியும் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். தைரியத்துடன் செயல்படக் கூடிய நேரமாக இருக்கும்.
தொட்டதெல்லாம் ஜெயம்
முயற்சிகள் அனைத்தும் பழிக்கும் காலகட்டமாக இருக்கும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நிறைய பயணம் செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். இடமாற்றம், வேலை மாற்றம், உத்தியோக மாற்றம் வருவதற்கான வாய்ப்புள்ளது. பெண் தெய்வத்தின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். பெண்களினால் ஆதாயம் வருவதற்கான வாய்ப்புள்ளது. நல்ல காலகட்டமாக இருக்கும். பெண் குழந்தைகல் நிறைய நன்மைகள் உண்டாகும் வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications