வெளிநாட்டில் இருந்து அடிக்கும் லக்.. கன்னி ராசிக்கு ஆடி மாதத்தில் செம ஏற்றம்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் ஏற்படும். ஆனி மாதம் முடிந்து தற்போது ஆடி மாதம் பிறக்கப் போகிறது.

ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதமாகும். ஆடித் திருவிழா, குலதெய்வ வழிபாடு, நல்ல காரியங்கள், உணவு தானமாகக் கொடுப்பது, அனைத்து கோயில்களின் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சூரியனின் நகர்வை வைத்தே ஒவ்வொரு மாதமும் கணிக்கப்படுகிறது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் மாதமே ஆடி மாதம். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பானதாகும்.
இந்த ஆடி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், மேன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் செவ்வாய் பகவான் பெயர்ச்சி ஆகவுள்ளார். உங்கள் ராசிநாதன் புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருக்கிறார். இது அனைத்து விதத்திலும் நல்ல பலன்களை கொடுக்கும். தொட்ட துலங்கும். உத்வேகத்துடன் செயல்பட்டு இறங்கிய காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். சிந்தனை மேம்படும். உத்யோகம், தொழிலில் லாபம் நன்றாக இருக்கும்.
பொருளாதாரம்
ராசிநாதனுடன் சூரியன் இணைந்துள்ளார். இது அற்புதமான அமைப்பு. சுக்கிரன் குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். குடும்பம் நல்ல மகிழ்ச்சியான சூழலில் இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். சுக்கிரன் - குருவுடன் இணைவதும் பொருளாதார ரீதியாக உங்களுக்கு சிறப்பான ஏற்றத்தை கொடுக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். தொழில் நன்றாக இருக்கும்.
சொத்துகள்
நிலம், வீடு, வண்டி, வாகனம் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துகளின் சேர்க்கை இருக்கும். வீடு புனரமைத்தல் உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்வீர்கள். சொந்த வீடு கனவு நிச்சயம் நனவாகும். வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய, ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காணப்படும்.
காதல்.. வெளிநாடு
காதல் உறவில் இனிமை அதிகரிக்கும். பிரிந்த காதலர்கள் இணைவார்கள். கணவன் - மனைவி இடையே அந்யோநியம் அதிகரிக்கும். கடவுளின் அணுகிரகம் நன்றாக உள்ளது. புதிய கடன் கிடைக்கும். ஆனாலும் கடன் நெருக்கடி அதிகரிக்காது. சுப செலவுகள் உண்டு. அப்பா வழி உறவால் ஆதாயம் உண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாடு, வெளிமாநில தொடர்புகளால் தொழில் விரிவடையும்.
கவனம்
சனி பகவான் ஆறாம் இடத்தை பார்ப்பதால் பிடிவாத குணம் அதிகரிக்கும். மேலும் சோம்பலும் அதிகளவு வெளிப்படும். எந்த காரியத்தையும் தள்ளிப் போடாமல் இருப்பது முக்கியம். மனதை குழப்பமடையாமல் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். புதிய முயற்சிகள் செய்வதற்கு இது சரியான காலம் இல்லை.. முயற்சி ஸ்தானத்தின் அதிபதி செவ்வாய் 12 ஆம் இடத்தில் மறைந்துள்ளார். சகோதர உறவில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
பரிகாரம்
யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது. நம் தகுதிக்கேற்ப கடன் வாங்க வேண்டும். கூட்டு தொழிலில் இருப்போர் கூட்டாளிகள், கணக்கு வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வீடு அருகில் உள்ள பெருமாள் கோயில் சென்று வழிபடுவது அற்புதமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications