என்ன லிஸ்ட் பெருசா போகுது.. சிம்ம ராசிக்கு ஆடி மாதத்தில் காத்திருக்கும் சவால்கள்

Subscribe to Oneindia Tamil

ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் சிம்மம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் ஏற்படும். ஆனி மாதம் முடிந்து தற்போது ஆடி மாதம் பிறக்கப் போகிறது.

Aadi madha rasi palan Simmam lucky zodiac signs

ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதமாகும். ஆடித் திருவிழா, குலதெய்வ வழிபாடு, நல்ல காரியங்கள், உணவு தானமாகக் கொடுப்பது, அனைத்து கோயில்களின் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சூரியனின் நகர்வை வைத்தே ஒவ்வொரு மாதமும் கணிக்கப்படுகிறது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் மாதமே ஆடி மாதம். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பானதாகும்.

இந்த ஆடி மாதத்தில் சிம்மம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், மேன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை உங்கள் ராசியில் இருந்த செவ்வாய் பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சுக்கிர பகவான் ரிஷபத்தில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது பகவான் உங்கள் ராசியில் இருக்கிறார். சனி பகவான் வக்கிரமடைந்துள்ளார். உங்கள் ராசி அதிபதி 12 ஆம் இடத்தில் மறைந்துள்ளார்.

லாபம்

குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானத்தில் சுக்கிர பகவான் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். ஆடி 10 ஆம் தேதி (26.7.25) சுக்கிரன் லாப ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். தொழில் அமோகமாக இருக்கும். பண வரவு சிறப்பாக, லாபம் நன்றாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

புத்திசாலித்தனம்

கடந்த காலங்களில் உங்கள் முயற்சியில் இருந்த தடைகள் நிவர்த்தியாகி வெற்றி கிடைக்கும். தொழிலில் உங்களின் புத்திசாலித்தனத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். குரு பகவான் ஐந்தாம் இடத்தை பார்ப்பதால் கடவுள் அருள் நன்றாக இருக்கும். மனதில் நினைத்த காரியங்களை செயல்படுத்துவீர்கள். குழந்தைகளுக்கு இந்த மாதம் அருமையாக இருக்கிறது.

குழந்தைகள்

குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். குழந்தைகளால் நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள். குழந்தைகள் விஷயத்தில் இருந்த அனைத்து குறைகளும் நிவர்த்தியாகும். உத்யோகம் இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

எச்சரிக்கை

மாத தொடக்கத்தில் செவ்வாய் உங்கள் ராசியில் இருப்பதால் கோபம், ஆக்ரோஷம் அதிகமாக இருக்கும். ராசி அதிபதி விரய ஸ்தானத்தில் இருப்பதால் எதிலும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டியது முக்கியம். ஏற்கனவே அஷ்டம சனி நடைபெற்று கொண்டிருக்கிறது. சனி குடும்பம் மற்றும் தன ஸ்தானத்தை பார்க்கிறார். கடன் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கை தேவை.

குடும்பம்

பணம் கொடுக்கல் வாங்கல், முதலீடுகளில் கவனம் வேண்டும். குடும்பத்திலும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன் - மனைவி மோதல் போக்கை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையிடம் விவாதம் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடக் கூடாது. மனக்குழப்பம் அதிகரிக்கும். உத்யோகம், தொழிலில் பணிச்சுமை அலைச்சல் அதிகமாக இருக்கும்.

பரிகாரம்

பயணங்கள் அதிகளவு காணப்படும். குரு - சுக்கிரன் இணையும்போது குடும்ப உறவுகள் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். தொழிலில் ஆவணங்கள், தகவல் தொடர்பில் சற்று எச்சரிக்கை தேவை. எதிர்மறை சிந்தனைகளை தவிர்க்காவிடின் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். உத்யோகத்தில் சிக்கல்கள் அதிகமாக காணப்படும். இருக்கும் உத்யோகத்தை தக்க வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். சிவன் கோயில் சென்று வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+