விருச்சிக ராசியை அடித்து துவைக்கும் கிரகங்கள்.. பணத்திற்கு நோ பஞ்சம்.. ஆபத்திலும் வரும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

Aani Maadha palan: வைகாசி நிறைவடைந்து ஆனி மாதம் தொடங்கியுள்ளது. ஜூன் 15 முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மிதுனத்துக்கு சூரியன் வரும் மாதமே ஆனி. ஏற்கனவே மிதுனத்தில் குரு அமர்ந்திருக்கிறார். தற்போது குருவுடன் சூரியன் சேர்கிறார். இதனால், உலகத்தில் சில விஷயங்களில் நன்மைகளும், சில விஷயங்களில் பிரச்சனைகளும் ஏற்படும்.

aani-madha-palan-lets-see-what-kind-of-benefit-will-get-viruchigam-scorpio-rasi-people-during-th

பொதுவாக ஆனி மாதத்தில் பெருமாள், நரசிம்மர், தாயார் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். கிருஷ்ணர், சிவன் வழிபாடு செய்வது நல்லது. சிவன் கோயில்களில் அன்னதானத்திற்கு பிரசாதம் வாங்கி கொடுப்பது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஆனி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசிக்காரர்கள் கண்டிப்பாக தெய்வ வழிபாடுளைத் தவறாமல் செய்து வருவது அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தும். தலைவலி, நரம்பு, கழுத்தில் இருந்து தலைக்குப் போகும் ரத்த ஓட்டங்கள், கீழ் முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பு, அமரும் இருக்கையில் கூட பாதுகாப்பாக இருக்க வேண்டும். வாகனங்கள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வன்மத்தால் வரும் ஆபத்து

சட்டத்திற்குப் புறம்பானவர்களுடைய நிழல் கூட படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மேலதிகாரிகள், உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மீது தேவையில்லாத வன்மத்தை வைத்திருப்பார்கள். அந்த வன்மத்திற்கு பலியாகக் கூடிய மாதம் இந்த ஆனி மாதம் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

3 குரங்கு பொம்மை

தான் உண்டு, தன் வேலை உண்டு என்று சுருங்கிக் கொள்வது இல்லை. தெய்வத்தை கும்பிடுபவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மூன்று குரங்கு பொம்மைகளை நியாபத்தில் வைத்துக் கொள்ளக்கூடிய விருச்சிக ராசிக்காரர்கள் புத்திசாலிகள். உங்களுக்கு வெளியிடத்தில் அனுகூலம் காணப்பட்டாலும். ஏதோ ஒரு மன வருத்தம், மனக் கஷ்டங்கள் நிச்சயமாக ஏற்படும்.

அனுகூலம்

லாபம், சந்தோஷம், அனுகூலம், வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். சுபகாரியங்கள், சுப விஷயங்கள் கைகொடுக்கக் கூடிய அனுகூலமான காலகட்டமாக இருக்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையக்கூடிய அற்புதமான அமைப்பு உண்டாகும். அபிராமி அந்தாதியில் 40, 59, 75 ஆவது பாடல் படிக்கக்கூடிய விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏற்றங்கள் ஏற்படும்.

கவனம்

தொழிலில் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். அடிமைத் தொழிலில் இருந்து தனிப்பட்ட தொழில் தொடங்குகிறேன் என்று உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. ஆவணி மாதத்தில் இருந்து எல்லா விஷயங்களிலும் படிப்படியாக ஏற்றங்கள் காணப்படும். குறிப்பாக ஆனி மாதத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.

கோபத்தை தவிர்க்கவும்

மன அழுத்தம் திடீரென்று ஏற்படும். நல்ல நட்புகள், நல்ல உறவுகளை வைத்துக் கொள்வது நல்லது. அவர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மையை ஏற்படுத்தி தரும். ரகசியங்களை பரம ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். யாரிடத்திலும் கோபதாபப்படாமல் இருப்பது நல்லது. குறிப்பாக சமூக வலைதளங்களில் இருக்கக்கூடிய விருச்சிக ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+