துலாம் ராசிக்கு அடிச்சது யோகம்.. அடுத்தடுத்து அதிர்ஷ்டம்.. முதலீடுகள் விஷயத்தில் ரொம்ப கவனம்
Aani Maadha palan: வைகாசி நிறைவடைந்து ஆனி மாதம் தொடங்கியுள்ளது. ஜூன் 15 முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மிதுனத்துக்கு சூரியன் வரும் மாதமே ஆனி. ஏற்கனவே மிதுனத்தில் குரு அமர்ந்திருக்கிறார். தற்போது குருவுடன் சூரியன் சேர்கிறார். இதனால், உலகத்தில் சில விஷயங்களில் நன்மைகளும், சில விஷயங்களில் பிரச்சனைகளும் ஏற்படும்.

பொதுவாக ஆனி மாதத்தில் பெருமாள், நரசிம்மர், தாயார் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். கிருஷ்ணர், சிவன் வழிபாடு செய்வது நல்லது. சிவன் கோயில்களில் அன்னதானத்திற்கு பிரசாதம் வாங்கி கொடுப்பது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஆனி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்காரர்கள் யோக பலத்தை அதிக அளவில் அனுபவிக்கப் போகும் காலகட்டமாக இருக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறுவதை கண் கூடாகப் பார்ப்பீர்கள். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். செவ்வாய்க்கிழமைகள் தோறும் தெய்வ வழிபாட்டை தவறாமல் செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும்.
ஆரோக்கியம்
கழுத்து, வயிறு தொடர்பான சிறு பிரச்சனைகள் வந்தாலும் அதனை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தை விட்டு தொலைதூரத்தில் இருப்பவர்கள், தொலைதூரத்தில் வேலை அமைப்பில் இருந்தாலோ பெற்றோர் பெரியோருடன் அழைத்து கனிவாகப் பேசுவது நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும். துணையிடத்தில் அது நடந்தது, இதை செய்தார்கள் என எல்லா விஷயங்களையும் கலந்தாலோசிப்பதை தவிர்ப்பது நல்லது
பிரச்சனைகள்
துணையிடம் மற்றும் உங்கள் பிள்ளைகளிடத்தில் மனம் வேறுபடுவது எதிர்காலத்தில் பல கஷ்டங்களை உருவாக்கும் வாய்ப்புள்ளது. கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை உங்களுக்குள்ளாகவே பேசி முடித்துக் கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினரிடம் பேசுவது தேவையில்லாத மனக் கஷ்டமும், சங்கடமும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
கவனம்
வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் அடுத்தடுத்து நிவர்த்தியாகும். பயணங்கள் சமயத்தில் புதிய அறிமுகத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். வேற்று மதத்தவரால் தேவையில்லாத பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களுக்காக நல்ல நண்பர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்
உடைமைகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முதலீடு சார்ந்த விஷயங்களில் அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புதன்கிழமை நாட்களில் எலுமிச்சை சாறு அல்லது உணவு தானத்துடன் எலுமிச்சை ஊறுகாய் அளிப்பது அற்புதத்தை ஏற்படுத்தும். விரையங்களில் இருந்து உங்களை காப்பாற்றும். பெற்றோருடன் தர்க்கங்களைத் தவிர்ப்பது நல்லது.
பண வரவு அதிகரிக்கும்
எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியடையும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். இதுவரை செய்து முடிக்காமல் இருந்த அனைத்து காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நிலைகள் படிப்படியாக மாறும். பண வரவு அதிகரிக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது.












Click it and Unblock the Notifications