கன்னி ராசிக்கு கண்டகச் சனியிலும் விபரீத ராஜயோகம்.. தங்க நகைகளை குவிக்கும் யோகம்
ஐப்பசி மாத பலன்: புரட்டாசி நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதத்தில் குரு பகவான் கடக வீட்டில் இருந்து உச்சமாகி இருக்கப் போகிறார். சூரியன் துலாம் வீட்டில் இருக்கப் போகிறார். சுக்கிரன் கன்ன ராசக்காரர்கள் வீட்டில் நீச்சமாக இருக்கிறார். சுக்கிரம் வரும் 16 ஆம் தேதி நீச்ச தன்மையை விட்டு தன் சொந்த வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்று அமரப் போகிறார். இதனால் மிகப்பெரிய யோகம் உண்டாகும். சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை அடைவதால் சுக்கிர ஆதித்ய மகா ராஜா யோகம் உருவாகும்.

புதன் 7 ஆம் தேதி விருச்சிக வீட்டிற்கு வரப் போகிறார். செவ்வாய் 10 ஆம் வீட்டுக்கு விருச்சிகத்தின் வீட்டுக்கு வருகிறார். செவ்வாயும், புதனும் குருவின் பார்வைக்கு வருகின்றனர். வீடு மனை சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குரு புதனைப் பார்ப்பதால் பெரிய அறிவைக் கூடிய அமைப்பு உண்டாகும். அந்த வகையில், இந்த ஐப்பசி மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான் விருச்சிக வீட்டிற்கு வந்து குரு பார்வை பெறுகிறார். இது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். தொழிலில் வளர்ச்சியை ஏற்படுத்தும். கன்னி ராசிக்கு கண்டகச் சனி நடைபெற்று இருப்பதால் கணவன் மனைவி பிரச்சனை, நண்பருக்குள் பிரச்சனை, வேலை சார்ந்த பிரச்சனை, பார்ட்னர் பிரச்சனை போன்றவை ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.
விடுதலை
இப்போது குரு பார்வை பெறுவதால் இந்தப் பிரச்சனைகள் அனைத்தில் இருந்தும் விடுதலை பெறுவீர்கள். தேவையில்லாமல் இருந்து வந்த மன உளைச்சல்கள் அனைத்தும் நீங்கும். நிம்மதி ஏற்படும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். தொழில் ரீதியாக பலரை சந்திக்கும் யோகம் உண்டாகும். உள்புறம், வெளிப்புறம் இருந்து வந்த கெட்ட விஷயங்கள் அனைத்தும் நீங்கும் காலகட்டமாக இருக்கும். தாயின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
நீசபங்க ராஜயோகம்
12 ஆம் அதிபதியாக இருக்கக்கூடிய சூரியன் 2 ஆம் வீட்டில் நீச்சமாவதால் வெளியூர், வெளிநாடு பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. தூக்கம் குறைவாக இருக்கும். நிம்மதி இருக்காது. ராசிக்குள் சுக்கிரன் இருப்பதால் மன அழுத்தம் ஏற்படும். ஏதாவதொரு இழப்பைச் சந்திப்பீர்கள். 16 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரன் சூரியனும் சேர்க்கை ஏற்படுவதால் சூரியன், சுக்கிரன் பலம் பெறுவதால் சூரியனுக்கு நீசபங்க ராஜயோகம் உண்டாகும். இதன் மூலம் ஏதாவதொரு வகையில் பண வரவைக் கொடுக்கும். பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்.
அந்நியோன்யம்
பிரிந்த கணவன், மனைவிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தால் 16 ஆம் தேதிக்குப் பிறகு வைத்துக் கொள்வது நல்லது. 16 க்குப் பிறகு கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் ஏற்படும். அதுவரை எல்லா விஷயங்களையும் பொறுமையாக கையாளுவது நல்லது. செவ்வாய் 3 ஆம் வீட்டுக்கே வருவதால் முயற்சிகள் அனைத்தும் கைகூடும். நகைகள் வாங்கும் யோகம் உண்டாகும். நகை அடகு வைத்திருந்தால் அதனை மீட்டெடுப்பீர்கள்.
விபரீத ராஜயோகம்
பண அமைப்பு ஏற்படும். தைரியம் அதிகரிக்கும். வெற்றிகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி ஏற்படும். திடீர் பண வரவு, திடீர் வருமானம், திடீர் அதிர்ஷ்டம் போன்றவை ஏற்படும். விபரீதமான ராஜயோகம் ஏற்படும். வீடு, மனை சொத்து சேரும் யோகம் உண்டாகும். லாபம் பெருகும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். திருமணம் சார்ந்த விஷயங்கள் நடக்கும்.
-
Dhanusu: தனுசு ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் நேரம்.. அள்ளிக் கொடுக்கும் குரு பகவான் -
Viruchigam: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி... குருவின் பார்வையில் கொட்டும் அதிர்ஷ்டம் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications