சுக்ராதித்ய யோகத்தால் ஜொலிக்கப் போகும் சிம்ம ராசி.. சனியிடம் இருந்து மொத்தமாக விடுதலை
ஐப்பசி மாத பலன்: புரட்டாசி நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதத்தில் குரு பகவான் கடக வீட்டில் இருந்து உச்சமாகி இருக்கப் போகிறார். சூரியன் துலாம் வீட்டில் இருக்கப் போகிறார். சுக்கிரன் கன்ன ராசக்காரர்கள் வீட்டில் நீச்சமாக இருக்கிறார். சுக்கிரம் வரும் 16 ஆம் தேதி நீச்ச தன்மையை விட்டு தன் சொந்த வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்று அமரப் போகிறார். இதனால் மிகப்பெரிய யோகம் உண்டாகும். சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை அடைவதால் சுக்கிர ஆதித்ய மகா ராஜா யோகம் உருவாகும்.

புதன் 7 ஆம் தேதி விருச்சிக வீட்டிற்கு வரப் போகிறார். செவ்வாய் 10 ஆம் வீட்டுக்கு விருச்சிகத்தின் வீட்டுக்கு வருகிறார். செவ்வாயும், புதனும் குருவின் பார்வைக்கு வருகின்றனர். வீடு மனை சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குரு புதனைப் பார்ப்பதால் பெரிய அறிவைக் கூடிய அமைப்பு உண்டாகும். அந்த வகையில், இந்த ஐப்பசி மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டமசனி, கேது இருந்தாலும் ராசியாதிபதி பலமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அந்த கஷ்டத்தை தாங்க முடியும். இந்த மாதத்தில் ராசியாதிபதி சூரியன் நீசம் பெறுவதால் அமைதியாக இருப்பது நல்லது. மன அழுத்தம், குழப்பம் அதிகரிக்கும். சூரியன் இந்த மாதம் முழுவதும் நீசம் தான். ஆனால், 16 ம் தேதிக்குப் பிறகு சுக்கிரன் ராசிக்குள் வருவதால், சூரியனுடன் சேரும்போது நீசபங்க ராஜயோகத்தை சூரியன் பெறுகிறார்.
சுக்ராதித்ய யோகம்
16 ஆம் தேதிக்குப் பிறகு அனைத்து காரியங்களையும் செய்யலாம். அதுவரை பொறுமையாக செயல்படுவது நல்லது. சூரியனும், சுக்கிரனும் சேருவது சுக்ராதித்ய யோகத்தை உருவாக்குவதால் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். முயற்சிகள் கைகூடி வரும். சகோதரர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும். முயற்சிகள் கைகூடும். சகோதரர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த தடைகள் நீங்கும்.
பண வரவு
புதன் விருச்சிகத்துக்கு வரும்போது குரு பார்வை பெறுவதால் கண்டிப்பாக பல நன்மைகள் கிடைக்கும். பண வரவுகள் உண்டாகும். தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். 16 ஆம் தேதி வரை பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. செவ்வாயும் ஆட்சி பலம் பெற்று வருகிறார். 10 ஆம் தேதிக்கு மேல் வீடு, மனை, சொத்து, வண்டி, வாகனத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பெற்றோர், உங்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பிரச்சனை நீங்கும்
4 ஆம் அதிபதி 4 ஆம் வீட்டுக்கு வரும்போது மன ரீதியாக இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். புத்துணர்ச்சி, தைரியமும் இயற்கையாகவே ஏற்படும். இதுவரை பட்டு வந்த அவமானங்கள் நீங்கும். பெயர், புகழ் கிடைக்கும். இழந்த சொத்து, இழந்த பணம் மீண்டும் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் உண்டாகும். குழந்தைகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
முன்னேற்றம்
செல்வம் நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னற்றத்தைக் காண்பீர்கள். பெரிய அளவுக்கு பாதிப்புகள் இருக்காது. சனி வக்கிரமாக இருந்தால் திருமண வரன் வந்து சேரும். கடன் விலகும், நோய் விலகும். வேலைவாய்ப்பு பெறுவீர்கள். சனி வக்கிரமாக இல்லையென்றால் வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடன் வாங்காமல் இருப்பது நல்லது. மற்றபடி இந்த மாதம் உங்களுக்கு அற்புதமான மாதமாக இருக்கும். சிவன், சித்தர் வழிபாடு அருமையான யோகத்தை தரும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications