Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Aippasi month rasi palan 2020: ஐப்பசி மாதத்தில் இந்த 2 ராசிக்காரர்களின் வருமானம் கூடும்

ஐப்பசி மாதம் துலாம் மாதம். சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். ஐப்பசி மாதத்தில் துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு. சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன் ஐப்பசி மாதத்தில் நீச்சம் அடைகிறார். சூரியனின் வேகம் இந்த மாதத்தில் குறைவாக இருக்கும். இந்த மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரத்தின்படி துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

ஐப்பசி மாதத்தில் நவ கிரகங்கள் செவ்வாய் பகவான் மீனம் ராசியில் வக்ரமடைந்துள்ளார். ரிஷபத்தில் ராகு, சிம்மத்தில் சுக்கிரன் கன்னி ராசியில் வக்ர புதன், துலாம் ராசியில் சூரியன், விருச்சிக ராசியில் கேது, தனுசு ராசியில் குரு, மகரம் ராசியில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

நவ கிரகங்களின் இடமாற்றம் இந்த மாதம் சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடைகிறார். வக்ரமடைந்த புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு வாக்கிய பஞ்சாங்கப்படி மாத இறுதியில் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கிரகங்களின் இடமாற்றம் சஞ்சாரத்தினால் துலாம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

கவலைகள் நீங்கும்

கவலைகள் நீங்கும்

துலாம் ராசிக்காரர்களே உங்க ராசியில் சூரியன் நீச்சமடைந்திருக்கிறார். ராசிக்கு 12ஆம் வீட்டில் சுக்கிரன் பரிவர்த்தனை யோகம் பெற்று நீசமடைந்திருக்கிறார். நிறைய நல்லது நடக்கும் கவலைகள் நீங்கும். இந்த மாதம் பணவரவு அபரிமிதமாக இருக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். சகோதரர் சகோதர்களிடையே பேச்சுவார்த்தை சுபமாக முடியும். வேலையில் குழப்பங்கள் நீங்கும். கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகள் கவனமும் எச்சரிக்கையும் தேவை. கணவன் மனைவி
உறவில் நெருக்கம் கூடும். வேலையில் சில பிரச்சினைகள் வந்து நீங்கும் உயரதிகாரிகளிடம் கவனமாக பேசவும். குரு பெயர்ச்சிக்குப் பிறகு சுபகாரியங்கள் கைகூடும். ஆன்மீக சுற்றுலா செல்ல வேண்டிய மாதமாகும்.

கல்வியில் முன்னேற்றம்

கல்வியில் முன்னேற்றம்

பிசினஸ் நல்லபடியாக முடியும். தொழில் வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். சரக்குகள் விற்று தீரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மந்தநிலை நீங்கி சுறுசுறுப்பு அதிகமாகும். குடும்பத்தில் இருந்து வந்த வம்பு வழக்குகள் நீங்கும். இறை தரிசனம் செய்யலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். புதிதாக வாகனங்கள் வாங்கலாம்.
பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெற பத்ரகாளி வழிபாடு செய்யவும்.

ஐப்பசியில் பரிகாரம்

ஐப்பசியில் பரிகாரம்

வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். பெண்களுக்கு நன்மைகள் நிறைந்த மாதாகும். ஐப்பசி மாதத்தில் தினசரி சூரிய நமஸ்காரம் செய்யவும். அன்னாபிஷேகத்தில் கலந்து கொண்டு அன்னதானம் செய்யவும். காவிரியில் புனித நீராடுவது அவசியம். ராசி நாதன் சுக்கிரன் நீசமடைந்திருப்பதால் ஸ்ரீரங்கநாதரை வணங்கவும். அதீதமான நன்மைகள் நடைபெறும். இந்த மாதம் சந்திராஷ்டமம் உங்க ஐப்பசி 17ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 4.24 மணி ஐப்பசி 19 ஆம் தேதி புதன் பகல் 2.49 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். மகாவிஷ்ணுவை வணங்க நண்மைகள் நடைபெறும்.

ஒற்றுமை அதிகரிக்கும்

ஒற்றுமை அதிகரிக்கும்

விரைய ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் இதயநோய் உஷ்ணம் தொடர்பான நோய் ஏற்படும். அரசு பணிகளில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். எதையும் ச்சரிக்கையோடு நிதானமாக அணுகவும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் செல்ல செழிப்பு அதிகரிக்கும். காதல் திருமணம் கைகூடி வரும். ராசியில் ஞானகாரகன் கேது சஞ்சரிப்பது மிக சிறப்பான யோகம். உங்க வாக்கிற்கு மதிப்பு கூடும். வம்பு வழக்குகள்
சாதகமாக முடியும். பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பேச்சாற்றல் அதிகரிக்கும்.

சொத்து சேர்க்கை ஏற்படும்

சொத்து சேர்க்கை ஏற்படும்

இந்த மாதம் புதிய வண்டி வாகனம் வாங்கலாம். புதன் சுக்கிரன் சஞ்சாரம் மூலம் மூலம் வருமானம் அதிகரிக்கும் பொருளாதார வளர்ச்சி மேம்புடும். பழைய கடன்கள் நிவர்த்தியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தனியார் துறை, வங்கித்துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி நாதன் இருப்பதால் புதிய வீடு வாங்கலாம். கட்டிய வீட்டினை புதுப்புக்கலாம்.

ஆரோக்கியத்தில் கவனம்

ஆரோக்கியத்தில் கவனம்

ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். நரம்பு பிரச்சினைகள் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். இந்த மாதம் 19 ஆம் தேதி புதன் பகல் 2.49 மணி முதல் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாகவும் எச்சரிக்கையாவும் இருப்பது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+