வசந்த பஞ்சமிக்குப் பிறகு எல்லா கஷ்டமும் ஓவர்.. சனியின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசியினர்
வசந்த பஞ்சமி 2025: பூர்வ பத்ர நட்சத்திரத்தில் சனி பகவான் பெயர்ச்சி ஆவதால் சில ராசிக்கார்கள் அனைத்துவிதமான பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்கப் போகின்றனர். சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியால் சுப பலன்களை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும். இந்த இடப்பெயர்ச்சியால் 12 ராசிகளும் அதன் தாக்கத்தை அனுபவிக்கும். சில ராசிக்காரர்களுக்கு அதிகமான சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். பிப்ரவரி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் முக்கியமான மூன்று கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது.

வசந்த பஞ்சமி இந்த ஆண்டில் சிறப்பானதாக இருக்கப் போகிறது. இந்த நேரத்தில் சனி பகவானும் தனது நட்சத்திரத்தை மாற்றி பெயர்ச்சியாகிறார். இந்த வசந்த பஞ்சமிக்குப் பிறகு சில ராசியினர் எல்லா கஷ்டங்களில் இருந்து விடுபடப் போகின்றனர். சனி கிரகம் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாகும். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தனது இடத்தை மாற்றிக் கொள்ளும்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி இந்த ஆண்டில் சனி பகவான் தன்னுடைய நட்சத்திரத்தை மாற்றுகிறார். அதாவது பூர்வ பத்ர நட்சத்திரத்தில் சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். பிப்ரவரி 2ஆம் தேதி சரியாகக் காலை 8:51 மணிக்குச் சனி பகவான் பூர்வ பத்ர நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் நுழையவுள்ளார்.
சனி பகவானின் இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் அனைத்துப் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடப் போகின்றனர். சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியால் சுப பலன்களை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கும்பம்: பூர்வ பத்ர நட்சத்திரத்தில் நுழையும் சனி பகவானால் கும்ப ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன. குடும்பத்துடன் இனிமையான நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள். உங்களுடைய உறவில் அன்பு, ஆதரவு பெருகும். இதுவரை வியாபாரம், தொழிலில் இருந்து வந்த அனைத்து தடைகளும் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். தொழிலில் வருமான ஆதாயங்கள் அதிகரிக்கும்.
மேஷம்: சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு பல்வேறு சிறப்பான பலன்களை அளிக்கப் போகிறது. இதுவரை முடிக்க முடியாமல் இழுபறியாக இருந்து வந்த அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். சொந்த வீடு வாங்குவதற்கு சிறப்பான நேரமாக இருக்கும். அதேபோல, தொழில் தொடங்குவதற்கும் நல்ல நேரமாக இருக்கும். நிலுவையில் இருந்து வந்த அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள்.
புதிய வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டு. உங்களுடைய நீண்ட நாள் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றும் காலமாக இருக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். உங்களுடைய கஷ்டங்கள், ஆழ்ந்த சிந்தனைகள் போன்ற அனைத்திலிருந்தும் விடுதலை அடைவீர்கள். தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது.
துலாம்: பூர்வ பாத நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகும் சனி பகவான் துலாம் ராசிக்காரர்களுக்கு அருள் மழையைப் பொழிய போகிறார். அமோகமான நேரமாக உங்களுக்கு இருக்கும். நிதி சார்ந்த அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை அடைவீர்கள். புதிய வருமான ஆதாயங்கள் இருக்கும். தொழில், வேலைகளில் நல்ல முன்னேற்றம், வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்களுக்கு சாதகமான சலுகைகளைப் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உங்களுக்கு நிம்மதியான மனநிலை ஏற்படும். மனதுக்குப் பிடித்தவர்கள், உறவுகளுடன் இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள். மன அழுத்தப் பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடைவீர்கள். குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் மீதான பாசம், அக்கறை அதிகரிக்கும் காலமாக இருக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications