Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா வைரஸ் சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை சரணடைவோம்

நீண்ட காலமாக நோய்களால் அவதிப்படுபவர்களும்,கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் சங்கடங்கள் தீரவும் அங்காரக சதுர்த்தி விரதம் இருந்தால் நோய் பாதிப்புகள் நீங்கி பூரண உடல் நலம் பெறுவார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விநாயகனை வணங்கினால் வினைகள் தீரும். விக்னங்களை போக்குபவர் விநாயகர். விநாயகருக்கு உகந்த விரதம் சதுர்த்தி விரதம். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகவும் துன்பங்கள், துயரங்கள், சங்கடங்களை நீக்கி சகல சௌபாக்கியத்தையும் தரக்கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம். செவ்வாய்கிழமையும், சங்கடஹரசதுர்த்தியும் இணைந்த நாளான இன்று அங்காரக சதுர்த்தி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் விநாயகரின் அருளோடு செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும்.

திதி வரிசையில் நான்காவது வரும் திதி சதுர்த்தி திதியாகும். இதில் தேய்பிறையில் வரும் 4வது திதியை சங்கட ஹர சதுர்த்தி திதி என்கிறோம். இந்த சதுர்த்தி விரதம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வேண்டி, இருக்கும் விரதம். கேது தோஷம் உள்ளவர்கள் கேதுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தங்களுக்கு வந்திருக்கும் சங்கடங்கள் தீர இந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருக்கலாம்.

சங்கடஹர சதுர்த்தி என்பது சந்திரன் உதயமாகும் போது விநாயகரை வழிபட்டு சந்திரனுக்கு பூஜை செய்வதாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி நாளில் காலையிலிருந்து விரதம் மேற்கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். இரவு சந்திரனுக்கு பூஜை முடிந்தபின் அந்த பிரசாதத்தை மட்டும் சாப்பிட்டு தனிமையில் படுத்து உறங்க வேண்டும். திருமணமாகாதவர்கள் கேதுவால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த விரதம் இருந்தால் நல்ல மண வாழ்க்கை அமையும்.

உருமாற்றம் அடையும் வைரஸ்.. தமிழகத்தில் புதிய "வகை" கொரோனா பரவுகிறதா? உண்மை பின்னணி என்ன?

தடைகள் நீக்கும் விரதம்

தடைகள் நீக்கும் விரதம்

ஓவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு எக்காரியத்திலும் தடை, தாமதங்கள் இல்லாமல் வெற்றிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் மிகுந்த லாபங்கள் கிடைக்கும். குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறப்பார்கள். குடும்பத்தின் பொருளாதார நிலை சிறிது சிறிதாக உயரும். வீட்டில் அனைத்து மங்களங்களும் உண்டாகும். ஹர என்றால் அறுத்துவிடு என்று அர்த்தம்

செவ்வாய் பகவான் சதுர்த்தி

செவ்வாய் பகவான் சதுர்த்தி

செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை அங்காரக சதுர்த்தி என்று அழைக்கின்றனர்.
இதற்கு ஒரு புராண கதையே உள்ளது. பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார்.

செல்வ வளம் தரும் செவ்வாய் சதுர்த்தி

செல்வ வளம் தரும் செவ்வாய் சதுர்த்தி

ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை சதுர்த்தியில் விரதத்தை தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன. புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்கி அவர்கள் கல்வியில் சிறக்க செய்யும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும்.

சனியின் பாதிப்பு குறையும்

சனியின் பாதிப்பு குறையும்

சதுர்த்தி நாளில் குழந்தைகள் பெயரில் விநாயகருக்கு அர்ச்சனை செய்து பென்சில், நோட்டுகள், உறவினர் அல்லாத குழந்தைகளுக்கு இனிப்பும் தானம் தந்தால் வீட்டு குழந்தைகளுக்கு கல்விச் செல்வம் தேடி வரும். பிள்ளை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் சங்கட சதுர்த்தியன்று அரிசி சாதத்தை சமைத்து பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளையாக பாவித்து தூவினால் விநாயகரின் அருளால் பிள்ளை வரம் கிடைக்கும்.

நீண்ட ஆயுள் தரும் விரதம்

நீண்ட ஆயுள் தரும் விரதம்

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு துன்பங்கள் நீங்கி நிலையான சந்தோஷம் கிடைக்கும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகள் கிடைக்கும். கேது திசை புக்தி நடப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டால் வாழ்வில் எல்லா தடைகளும் விலகும்.

கடன் பிரச்சினை அகலும்

கடன் பிரச்சினை அகலும்

வேலையில்லாமல் சிரமப்படுபவர்களும், நீண்ட நாட்கள் நோயினால் அவதிப்படுபவர்களும், கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்டிருக்கும் சங்கடங்கள் தீர இந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை நினைத்து விரதம் இருக்கலாம். இதனால் தீராத நோய்களும் தீரும், திருமண தடை அகலும். தீராத கடன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் 11 செவ்வாய்கிழமைகளில் தொடர்ந்து விநாயகருக்கு வெற்றிலைமாலை அணிவித்து அங்காரக சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் கடன் பிரச்சினை தீரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+