சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உருமாற்றம் அடையும் வைரஸ்.. தமிழகத்தில் புதிய "வகை" கொரோனா பரவுகிறதா? உண்மை பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த மூத்த மருத்துவர்கள் சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.

Recommended Video

    கொரோனா வைரஸ்.. என்ன நடந்தது.. வெள்ளை அறிக்கை வெளியிட்டது சீனா

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் தீவிரம் அடைந்து வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது தினமும் ஆயிரத்திற்கு அதிகமான கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நேற்று 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது புதிய உச்சம் ஆகும்.தமிழகத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது. நேற்று தமிழகத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர்.

    1/3 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து இருக்கலாம்.. ஐ.சி.எம்.ஆர். பகீர்! 1/3 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து இருக்கலாம்.. ஐ.சி.எம்.ஆர். பகீர்!

    அதிகரிக்கிறது

    அதிகரிக்கிறது

    தமிழகத்தில் இப்படி தினமும் கேஸ்கள் அதிகரிக்கிறது. அதேபோல் பலி எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இந்த நிலையில்தான் தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த மூத்த மருத்துவர்கள் சிலர் விளக்கம் அளித்துள்ளனர். இந்த செய்தி உண்மை இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    ஏன் உண்மை இல்லை

    ஏன் உண்மை இல்லை

    பொதுவாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுக்க பல்வேறு வகையான கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அது என்ன கொரோனா வைரஸில் வகை என்று கேட்கலாம். கொரோனா வைரஸ் என்பது ஒரு ஆர்என்ஏ வகை வைரஸ் ஆகும். பொதுவாக ஆர்என்ஏ வகை வைரஸ்கள் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு செல்லும் போது உருமாற்றம் அடையும். டிஎன்ஏ வகை வைரஸ்கள் உருமாற்றம் அடையாது.

    பல ஸ்டிரெயின்

    பல ஸ்டிரெயின்

    இப்படி ஆர்என்ஏ வகை வைரஸ்கள் உருமாற்றம் அடையும் பண்பிற்கு mutation என்று பெயர். சீனாவில் இருந்து தோன்றிய கொரோனா வைரஸ் பல வகையில் mutation அடைந்து இருக்கிறது. இதை முதலில் ஆர், எல் என்று சில வகையில் mutation அடைந்து உருமாற்றம் அடைந்தது. அதன்பின் ஏ1, ஏ2, ஏ3 என்று 10க்கும் அதிகமான வகைகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வகைகள் உருவானது.

    இந்தியாவில் பரவியது

    இந்தியாவில் பரவியது

    உதாரணமாக அமெரிக்காவில் பரவிய கொரோனா வைரஸ் வகை வீரியம் அதிகம் இருந்தது. இதனால் அங்கு பலி எண்ணிக்கையும் அதிகம் ஆனது. அமெரிக்காவில் ஆர் வகை கொரோனா தீவிரமாக பரவியது. இந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் வகை இந்தியாவிலும் பரவியது. அமெரிக்காவில் பரவிய அதே வைரஸ் வகைதான் மகாராஷ்டிரா, குஜராத்திலும் பரவியது. இதனால் அங்கு பலி எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

    தமிழகம் நிலை

    தமிழகம் நிலை

    இந்த நிலையில்தான் தமிழகத்திலும் இதேபோல் உருமாற்றம் அடைந்த கொரோனா பரவியது. தமிழகத்தில் அமெரிக்காவிலிருந்து வந்த கொரோனா, சவுதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்த கொரோனா மற்றும் உள்ளுக்குளேயே லேசாக உருமாற்றம் அடைந்த கொரோனா என்று நிறைய வகை பரவியது. இதில் ஏ வகை வைரஸ்களுக்கும் பல நாட்களாக பரவி வருகிறது. புதிதாக எதுவும் நடக்கவில்லை.

    வீரியம் இல்லை

    வீரியம் இல்லை

    தமிழ்கத்தில் பரவிய வைரஸ் வகை பெரிய அளவில் வீரியம் கொண்டதாக இல்லை. இதனால் தமிழகத்தில் அதிகமாக கொரோனா பலிகள் இல்லை. கேரளாவில் இப்படித்தான் வீரியம் இல்லாத கொரோனா வைரஸ் பரவியது. அங்கு மத்திய கிழக்கில் பரவிய வைரஸ்தான் பரவியது. இதனால் அங்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. கொரோனாவும் கட்டுப்படுத்தப்பட்டது.

    புதிதாக பரவவில்லை

    புதிதாக பரவவில்லை

    இது தொடர்பாக மருத்துவர்கள் தெரிவிக்கையில், தமிழகத்தில் புதிதாக கொரோனா வகை வைரஸ் எதுவும் பரவவில்லை. ஏற்கனவே பரவி வரும் வைரஸ் வகைகள் மட்டுமே தற்போது பரவி வருகிறது. இது தொடர்பாக வெளியாகும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம். ஆர்என்ஏ வைரஸ் உருமாற்றம் அடைவது என்பது இயல்பான விஷயம்தான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    English summary
    Coronavirus: Is Tamilnadu seeing a mutated strain of the virus in the recent days?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X