அதிசார குரு பெயர்ச்சியால் அட்டகாசமான பலனை அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் நீங்கதான்
அதிசார குரு பெயர்ச்சியினால் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களும் சில ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன்களும் கிடைக்கப்போகிறது. கும்ப ராசியில் செப்டம்பர் மாதம் வரை சஞ்சரிக்கும் குருபகவானால் 12 ராசிக்காரர்களுக்கும் என்ன ப
சென்னை: நவ கிரகங்களில் குரு பகவான் சுப கிரகம். குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு காலம் தங்கியிருப்பார். மகர ராசியில்
மகரத்தில் சில மாதங்களாக சஞ்சரித்த குருபகவான் ஏப்ரல் 5ஆம் தேதி நள்ளிரவு முதல் கும்பராசிக்குப் பெயர்ச்சி ஆகி அங்கே செப்டம்பர் 15ஆம் தேதி வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் 12 ராசிக்காரர்களும் இதுவரை நடைபெற்றுவந்த பலன்களில் மாறுபாடுகள் ஏற்படும்.
இந்தக் காலகட்டத்தில் அவர் கும்பராசியில் அமர்ந்து 5, 7, 9ம் பார்வையாக மிதுனம், சிம்மன், துலாம் ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். குருவின் சஞ்சாரம் பார்வையால் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசிக்காரர்கள் அற்புதமான பலனை அனுபவிக்கப் போகின்றனர். அதே நேரத்தில் இந்த அதிசார குரு பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பு வருமா என்று அஞ்ச வேண்டாம் சின்னச் சின்ன சங்கடங்கள் மட்டுமே வந்து செல்லும். குரு பகவான் பெரிய அளவில் சோதனைகளை தர மாட்டார்.
"ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்
தீதிலாதொரு முன்றிலே துரியோதனன் படைமாண்டதும்
இன்மை யெட்டினில் வாலி பட்டமிழந்ததும்
ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்
தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனதும்
சத்தியமாமுனி யாறிலே இருக்கையில் தளை பூண்டதும்
வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் விழ்ந்ததும் என்று குரு பெயர்ச்சி பழம் பாடல்"மேற்கண்ட பலன்கள் அப்படியே நடக்கும் என்பது உறுதியில்லை. இந்த குரு பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் நடைபெறும் என்று பார்க்கலாம்.

மேஷம்
குரு பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வேலையில் சம்பள உயர்வும் புரமோசனும் கிடைக்கும். வேலை இழந்து தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். தொழில் முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3,5,7ஆம் வீடுகளின் மீது விழுவதால் சகோதரர்களின் உதவி கிடைக்கும். சகோதரர்களுக்கு உதவி செய்வீர்கள். திருமணம் சுப காரியம் நடைபெறும். குழந்தைக்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு மேன்மைகளை அள்ளித்தரப்போகிறது. குரு பகவான் உங்களை ஜொலிக்க வைக்கப்போகிறார். குரு தட்சிணாமூர்த்தியை வணங்கி வர நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.

ரிஷபம்
குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமர்வதால் வேலை தொழிலில் அதிக கவனம் தேவை. பத்தில் குரு பதவி பறிபோய் விடுமோ என்று பயப்பட தேவையில்லை. குருவின் பார்வையால் பணம் தாராளமாக வரும். அதே நேரத்தில் எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் தேடி வரும். குரு நான்காம் வீட்டினை பார்வையிடுவதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். வீட்டினை அழகுபடுத்த ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். தொழிலில் தடைகள் தாமதங்கள் ஏற்படும். சிலருக்கு வேலையில் சிக்கல் ஏற்பட்டாலும் புதிய வேலை கிடைக்கும். வியாழக்கிழமை விரதம் இருந்து குரு பகவானை வணங்க பாதிப்புகள் குறையும்.

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பாக்யங்களை அள்ளித்தரப்போகிறார். தடைபட்டு வந்த காரியங்கள் தடைகள் இன்றி நிறைவேறும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நல்ல வேலை கிடைக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். பதவி உயர்வு ஏற்படும். குரு பகவான் உங்க ராசியின் மீது விழுவதோடு மட்டுமல்லாது ராசிக்கு முன்று ஐந்தாம் வீடுகளின் மீது விழுகிறது. தைரியம் தன்னம்பிக்கை கூடும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகளும் பூர்வ புண்ணிய சொத்துக்களினால் வருமானமும் கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய நன்மைகளும் சந்தோஷமும் அதிகரிக்க குருபகவானை வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வணங்கலாம்.

கடகம்
எட்டாம் வீட்டில் அமரும் குரு அஷ்டம குரு உங்களின் கஷ்டங்களை போக்குவார். வேறு வேலைக்கு இப்போதைக்கு முயற்சி செய்ய வேண்டாம். இருக்கிற பதவியை தக்க வைத்துக்கொள்ளுங்கள். அஷ்டம சனியினால் ஏதாவது கஷ்டம் வருமோ என்று பயமும் கவலையும் அதிகரிக்கும். அந்த கவலையை குரு போக்குவார். குரு பார்வையால் பணவரவு கூடும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உறக்கமின்றி தவித்த உங்களுக்கு சுகமான உறக்கம் வரும். இனிய பயணங்கள் கிடைக்கும். பாதிப்புகள் குறைய குருபகவானை வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ராஜயோக காலம் வந்து விட்டது. ஏழாம் வீட்டில் அமரப்போகும் களத்திர ஸ்தான குருவின் நேரடி பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. இதுநாள் வரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது. உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். திருமண தடை நீங்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் வரும். . சமூகத்தில் நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். பணம் பொருள் செல்வம் தேடி வரும். சுகமும் சந்தோஷமும் கிடைக்கும். மேலும் நல்லது நடக்க வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை உடுத்தி குரு பகவானை வணங்குங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டில் குரு ருண ரோக சத்ரு ஸ்தான குருவாக பயணம் செய்கிறார். நோய் ஸ்தானத்தில் அமரப்போகும் குருவினால் எதிரிகள் பிரச்சினைகள் நீங்கும். உடலில் இருந்த நோய்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. குரு பார்வை உங்கள் ராசிக்கு 2,12,10ஆம் வீடுகளின் மீது விழுகிறது. திடீர் பணவரவு வரும். நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருந்த சங்கடங்கள் தீரும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் வியாழ ஹோரையில் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டில் பூர்வ புண்ணிய குருவாக சஞ்சாரம் செய்கிறார். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். உங்கள் மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானத்தின் மீதும் குருவின் பார்வை விழுகிறது. செய்யும் தொழிலில் லாபம் ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புகழும் கீர்த்தியும் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். வியாழக்கிழமைகளில் சித்தர்கள் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த பல ஆண்டுகாலமாகவே சங்கடங்கள் அனுபவித்து வருகிறீர்கள். ஏழரை சனி முடிந்தது என்று பெருமூச்சு விட்ட நிலையில் ஜென்ம கேது வந்து அமர்ந்துள்ளார். இப்போது குரு பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவினால் சுகங்களை அனுபவிக்கப் போகிறீர்கள். வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். நிலம் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். குருவின் பார்வை உங்க ராசிக்கு 12,10, 8 ஆம் வீடுகளின் மீது விழுவதால் சுப செலவுகள் ஏற்படும். சந்தோஷமும் சௌபாக்கியமும் பெருகும். சிலர் இந்த கால கட்டத்தில் வெளிநாடு செல்லும் பாக்கியம் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். அவமானங்கள் நீங்கும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்க மகான்களின் ஜீவ சமாதிக்கு சென்று வணங்கி வாங்க நல்லது நடக்கும்.

தனுசு
உங்கள் ராசி அதிபதி குரு பகவான் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. யாரையும் நம்பி பணத்தை கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். குருவின் பார்வை உங்க ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப காரியம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத சந்தோஷங்களும் சௌபாக்கியங்களும் தேடி வரும். குரு தட்சிணாமூர்த்தியை நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மகரம்
இதுநாள் வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த குருபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தனம், குடும்ப வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. ஏழரை சனியால் கஷ்டப்பட்டு, ஜென்ம குருவால் அவதிப்பட்டு வந்த உங்களுடைய பிரச்சினைகள் அத்தனையும் தீரும் காலம் வந்து விட்டது. நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பணம் வீடு தேடி வரும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரப்போகிறது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6,8,10ஆம் வீடுகளின் மீது விழுவதால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் தீரும் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும் மேலும் நன்மைகள் கிடைக்க வியாழக்கிழமை குரு பகவானை நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.

கும்பம்
இதுநாள்வரை விரைய ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் கும்ப ராசியில் ஜென்ம குருவாக அமரப்போகிறார். ஜென்ம குரு என்று பயப்பட வேண்டாம் குரு அள்ளித்தரப்போகிறார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 5,7,9ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும். திருமணம் கை கூடி வரும். குழந்தை பாக்கியம் கைகூடி வரும் பாக்கியங்கள் தேடி வரும். ஏழரை சனியால் ஏற்பட்ட பாதிப்புகளும் நீங்கும் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழிலில் ஏற்பட்டு வந்த தடைகளும் தாமதங்களும் நீங்கி வருமானம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மீனம்
உங்கள் ராசி அதிபதி குரு பகவான் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். நிறைய வருமானம் வரும். பணத்தை சேமிக்க பாடு பட்டாலும் முடியாது மருத்துவ செலவுகள் ஏற்படும். குருவின் சுப பார்வை ராசிக்கு நான்கு, ஆறு, எட்டு, யால் நோய்கள் தீரும் கடன்கள் அடைபடும் கண்டங்கள் விலகும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்க மவுன விரதம் இருப்பது நல்லது விட்டுக்கொடுத்து செல்லவும். வீடு வண்டி வாகனம் வாங்குவீர்கள். குரு பகவான் ஸ்தலங்களுக்கு சென்று வாருங்கள் பாதிப்புகள் நீங்கும் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications