புது வீடு, புது கார் கலக்கப்போகும் சிம்ம ராசி.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி கொட்டப் போகுது
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த அற்புதமான ஆகஸ்ட் மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதம் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும்.

தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ராசிக்கு அதிபதியான சூரிய பகவான் முதல் 16 நாட்கள் 12 ஆம் இடத்தில் மறைந்திருக்கிறார். ராசியில் கேது பகவான் இருப்பதால் முதல் 16 நாட்கள் மன குழப்பங்கள் ஏற்படும். எந்த வேலையை செய்தாலும் அதனை நேரடியாக முடிக்காமல் மறைமுகமாக செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். 17 ஆம் தேதி சூரியன் ஆட்சி பெற்று அமர்வதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். தனியார் துறையில் உயர் பதவி, அரசு வேலை, புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
வீடு, நிலம் வாங்கும் யோகம்
ராசியில் சூரியன் ஆட்சியாகவும், தன ஸ்தானத்தில் அதிகார கிரகமான செவ்வாய் அமர்ந்திருப்பதாலும் பேச்சில் அதிகாரம் தோன்றும். ராசியில் சூரியன், கேதுவும் இருப்பதால் அரசு அதிகாரி, உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீது வம்பு, வழக்குகள் உருவாவதற்கான வாய்ப்புள்ளது. ராசிக்கு 2 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் இருக்கும்போது அடிக்கடி கோபம் ஏற்படும். சிலருக்கு வீடு கட்டும் யோகம் உண்டாகும். நிலம், இடம் வாங்கும் வாய்ப்புள்ளது.
முயற்சிகள் பலிக்கும்
பாக்கியாதிபதி 2 ஆம் இடத்தில் இருப்பதால் தன வரவு ஏற்படும். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சகோதரர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். சுக்கிர பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் முயற்சிகள் அனைத்தும் பnிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்படும். புதிய கார் வாங்கும் யோகம், நல்ல பயணங்களைச் செய்து மகிழ்வீர்கள். கம்யூனிகேஷன் துறையில் சிலருக்கு வேலை, உயர் பதவிகள் கிடைக்கும்.
பண வரவு
புதன் லாபத்தில் இருப்பதால் அற்புதமான பண வரவு உண்டாகும். தொழில், வியாபாரம், வேலையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வம்பு, வழக்கு வந்தால் ஒரு கை பார்த்துவிடலாம் என்கிற மனதிடம் உருவாகும். குரு பகவான் 7 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாடு யோகம் உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.
பகை வேண்டாம்
அஷ்டமத்தில் சனி இருப்பதால் வேலை செய்யும் இடத்தில் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. விபரீத ராஜயோகம் உண்டாகும். வேலை மாற்றம் பெறும் வாய்ப்புள்ளது. காப்பீடு நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு நல்ல காலகட்டம். துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் துணைக்கு நல்ல வருமானம் ஏற்படும். குடும்பத்தில் சிக்கல் ஏற்படும். உங்கள் வேலையிலும் சிறு சிறு பாதிப்புகள் வந்து போகும்.
பதவி உயர்வு
குரு லாபத்தில் இருப்பதால் செயற்கை முறையில் கருத்தரித்தலுக்கு வாய்ப்புள்ளது. செவ்வாய் 6 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு யோகம் உண்டாகும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். 10 ஆம் இடத்துக்கு அதிபதியாக இருக்கும் சுக்கிரன் லாபத்தில் அமர்ந்திருப்பது வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
வழிபாடு
ஐடி, சர்வீஸ் துறை, கெமிக்கல் இன்டஸ்ட்ரி, ரயில்வே துறையில் இருப்பவர்களுக்கு குட் நியூஸ் வரும் நேரமாக இருக்கும். உங்களுக்கு திருப்பரங்குன்றம் முருகனை வழிபடுவது வாழ்க்கையில் அனைத்து விதமான முன்னேற்றங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications