Viruchigam rasi palan: விருச்சிக ராசிக்கு ஆகஸ்டில் வரும் மாற்றம்.. அதிர்ஷ்டமா?.. துரதிர்ஷ்டமா?

Subscribe to Oneindia Tamil

ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த அற்புதமான ஆகஸ்ட் மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதம் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும்.

august-month-rasi-palan-2025-viruchigam-scorpio-rasi-people-will-get-fortuned-and-good-benefits-d

தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் தரும் மாதமாக இந்த ஆகஸ்ட் மாதம் இருக்கும். பூமி லாபம், சகோதர லாபம் போன்ற வாழ்க்கையில் நிறைய விதமான லாபங்கள் கிடைக்கும். வெற்றியை நோக்கி பயணிக்கும் காலமாக இருக்கும். செவ்வாய் 11 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் இனி வெற்றியை நோக்கி பயணிப்பீர்கள். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மூத்த சகோதரனுக்கு உதவிகள் செய்வீர்கள். கணவருக்கு உங்களின் பெரிய பங்களிப்பு கிடைக்கும்.

குடும்பம்

குரு பகவான் 8 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். 7 ஆம் இடத்தின் அதிபதியும் அமர்ந்திருக்கிறார். சிலருக்கு கணவன், மனைவிக்குள் பிரச்சனை ஏற்படும். திருமணமான இளம் தம்பதிகள் பிரிவதற்கான வாய்ப்புள்ளது. அஷ்டமத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பது அவ்வளவு நல்லதில்லை. கணவன், மனைவிக்குள் ஈகோ உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. யாரோ ஒருவர் தூண்டிவிடும் வாய்ப்புள்ளதால் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்குள் மூன்றாம் நபரை அனுமதிக்காமல் இருப்பது நல்லது.

பண வரவு உண்டாகும்

இரண்டாம் இடத்தை குருவும், சுக்கிரனும் பார்ப்பது காசு, பணம் வரவு உண்டாகும். அதிர்ஷ்டவசமான வாய்ப்புகள் சிலருக்கு வரும். சனி 5 ஆம் இடத்தில் வக்கிரப்பட்டு இருப்பதால் காதல் திருமணங்கள் நடக்கும் யோகம் உள்ளது. காதலில் பிரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. 10, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தடைகள் வரும் என்பதால் குலதெய்வத்தை வழிபடுவது நல்லது.

பாதுகாப்பில் கவனம்

செவ்வாய் 11 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் எதிரிகளால் தொந்தரவு ஏற்படுவதற்கான வாய்ப்பும், லாபமும் ஏற்படும். உங்களுக்கு கெடுதல் நினைப்பவர்களால் நன்மைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் கவனமாக இருப்பது நல்லது. தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளும்போது பாதுகாப்பாக இருப்பது நல்லது. உடைமைகள், நகைகள், சுய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அரசு வேலை

சூரிய பகவான் 10 ஆம் இடத்தில் ஆட்சியாக வருவதால் அரசாங்க வேலை, அதிகார வேலை கிடைக்கும் யோகம் உண்டாகும். மூத்த சகோதரர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துகள் தொடர்பான விஷயங்களில் யோகம் ஏற்படும். சிலருக்கு திடீரென வெளிநாட்டு வாய்ப்புகள் கூடி வரும். வெளிமாநிலங்களில் நீங்கள் குடிபெயரக்கூடிய அமைப்போ, வெளிமாநிலங்களில் வேலைக்குச் செல்லும் அமைப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது.

முருகன் வழிபாடு

நிறைய வெற்றிகள் வாழ்க்கையில் வந்து சேர முருகப் பெருமானை வழிபடு நன்மை பயக்கும். குறிப்பாக, திருச்செந்தூர் முருகனை வழிபடுவது மாற்றங்களையும், ஏற்றங்களையும் தரும். திருச்செந்தூருக்குச் சென்று வதன ஆரம்பத்துறை எனும் கடலில் குளித்துவிட்டு, நாழிக்கிணறில் குழிக்க வேண்டும். பின்னர், புதிய ஆடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்குள் சென்று முருகப் பெருமானை மனதார வழிபடுவது, பன்னீர் அபிஷேகம் செய்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+