புதன் ஜெயந்தி 2023: அறிவும் புத்திசாலித்தனமும் அதிகரிக்கணுமா? மதுரை மீனாட்சி துணையிருப்பாள்
மதுரை: நவ கிரகங்களில் புதன் மகா விஷ்ணுவின் அம்சம். மனிதர்களின் உடற்கூறு இயக்கத்தில் புதன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத் என்ற வடமொழிச் சொல்லின் பொருளே அறிதல் என்பதுதான். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பழமொழி. மனிதர்களின் அறிவும் புத்திசாலித்தனமும் அதிகரிக்க புதன் ஸ்தமான மதுரை மீனாட்சியை வணங்க வேண்டும். திங்கட்கிழமை புதன் ஜெயந்தி தினமும் ஆகும் இந்த நாளில் புதன் பகவானைப் பற்றி அறிந்து கொள்வோம்.
புதன் பகவான்: மனிதர்களின் மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு புதன் ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால் அவர் அறிவிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்குவார். அவரை உலகமே வியந்து பார்க்கும்.

புதன் ஜெயந்தி: புதன் என்றாலே புத்திக் கூர்மை ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக அமையப்பெற்றவர் புத்திக்கூர்மை மிக்கவர், ஞாபக சக்தி அதிகம் இருக்கும். ஜாதகத்தில் புதன் பலம் பெற்றவர் பேச்சில் வல்லவர், எந்த நேரமும் கலகலப்பாகவும், நகைச்சுவையாகவும் பேசும் இவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். பெரிய விஞ்ஞானி, மேதைகளாக வருவார்கள், தன் திறமையால் பெரும் பொருட்கள் சேர்ப்பார்கள்.
பச்சை நிறமே: 12 ராசிகளில் மிதுனம், கன்னி ராசிகளின் அதிபதி புதன். கன்னியில் உச்சமைடைகிறார் மீனம் ராசியில் நீசமடைகிறார். கையில் புத்தகம் ஏந்தி இருக்கும் இவருக்கான கடவுள் விஷ்ணு. தானியம் பயறு, மலர் வெண்காந்தள் மலர். ராசிக்கல் மரகதம். நான்கு கரங்கள் உடைய புதன், மஞ்சள் ஆடை அணிந்து தங்க ஆபரணங்கள் பூட்டி, சிம்ம வாகனத்தில் வலம் வருபவர். பச்சை நிறம் பிடித்தமானது. பூமியில் பயிர்களுக்கு எல்லாம் பசுமை தரும் கிரகம் புதன். வியாபாரத்தில் வெற்றி, தர்க்க சாஸ்திரத்தில் வல்லமை, கல்வி மேன்மை எல்லாம் வழங்குபவர்.
வித்தைக்காரகன் புதன்: மிதுன லக்னத்துக்கு லக்னாதிபதி புதன் லக்னத்தில் இருந்தாலும், உச்ச வீடான கன்னியில் இருந்தாலும் உயர் கல்வி, சொந்த வீடு, வசதியான வாழ்க்கை போன்ற யோக பலன்கள் ஜாதகருக்கு உண்டாகும். புதிய வித்தைகளில் ஜொலிப்பார். வாதம் விவாதங்களில் யாரும் இவரை வெல்லுவது கடினம், நகைச்சுவை உணர்வு, காதல் உணர்வும் மிக்கவர், சுக்ரனோடு சேரும் போது வலிமை மேலும் அதிகரிக்கும்.
திறமைசாலிகள்: கன்னியில் இருக்கும் போது புதன் உச்ச பலமும் பெறுகிறார் சாமர்த்தியசாலி சூழலுக்கு ஏற்ற காரியங்களை செய்து வெற்றியும், புகழும் பெறுவார். தன் திறமையால் பெரும் பொருட்கள் சேர்ப்பார்கள், வியாபாரத்திலும் வல்லவர், வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ்வார். கணிதம், ஜோதிடம், புத்தகம், விளம்பரம், எழுத்தாளர்,ஓவியம், சிற்பம்,தகவல் தொடர்பு துறைகளில் ஜொலிப்பார்.

நரம்பு கோளாறுகள்: நரம்பு மண்டலத்திற்கு காரகனான புதன் ஜாதகத்தில் பலமிழந்து பாவிகளின் சேர்க்கை, அல்லது பாவிகளின் பார்வை பெற்றால் தலையில் இரத்த ஒட்டம் பாதிக்கும். மூளையில் கட்டி, அடிக்கடி தலை வலி ஏற்படும் அமைப்பு உண்டாகும். புதன் மற்றும் சனி சேர்க்கை பெற்று சுப கிரக சேர்க்கை பார்வை இன்றி சனி பலம் இழந்து புதனுடன் இணைந்தாலும், மனக்கவலை, அச்சம், மனச்சோர்வு உண்டாகும். தலை வலியால் சோர்வு, தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் உண்டாகும்.
தலைவலி: புதனுக்கு வக்ரம், அஸ்தங்கம், நீச்சம் போன்ற பலம் குறையும் கால கட்டங்கள் உண்டு. இந்தக் கால கட்டத்தில் பிறந்த குழந்தைகள் புதனின் ஆற்றலை குறைவாக பெற்றிருப்பார்கள். புதன் வக்ரமாக இருக்கும் காலங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது. புதன் பாதிக்கப்பட்டால் நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, வலிப்பு நோய்கள், கிறுகிறுப்பு, தலைச்சுற்றல், தலைவலி, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், ஞாபக மறதி, உணர்ச்சியற்றுப்போதல், கை, கால்கள் மரத்துப்போகும். ஜாதகத்தில் புதன் பலம் இழந்திருந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் மூளையில் கோளாறு, நரம்பு மண்டலம் பாதிக்கும் அமைப்பு உண்டாகும்.
கை கால் செயல் இழப்பு: புதன் சமநிலை கிரகம். இந்தக் கிரகம் ஒருவரை நல்ல வழியிலும் செலுத்தும், தீய வழியிலும் கொண்டு செல்லும். தனிமையில் சுயஇன்பம் காணும் ஆவலை தூண்டும் கிரகம் புதன் ஆகும். ஓரினச் சேர்க்கைகள் மூலம் உண்டாகும் நோய்கள், பறவைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் மூலம் உண்டாகும் நோய்கள், விஷ வாயு தாக்கி கை, கால்கள் செயல் இழப்புக்கும் புதனே காரணமாக திகழ்கிறார்.

மதுரை மீனாட்சியம்மன்: மதுரை மீனாட்சியம்மன் புதன் ஸ்தலம். புதன்கிழமைகளில் மதுரை மீனாட்சியை வணங்க கல்வி அறிவில் சிறந்து விளங்கலாம். திறமைசாலிகளாகவும் வேலையில் புத்திசாலித்தனத்தோடும் இருக்கலாம். நாகை மாவட்டத்தில் உள்ள திருவெண்காட்டில் புதனுக்கான ஆலயம் உள்ளது. திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ள சிவனின் பெயர் சுவேதாரண்யேச்வரர். அம்பாளின் பெயர் பிரும்மவித்யாம்பிகை. கல்வியிலும் புத்திசாலித்தனத்திலும் சுமாராக இருக்கும் பிள்ளைகளை இங்கு அழைத்து சென்று வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications