சந்திர கிரகணம் 2025: தலைவர்களுக்கு கண்டம்.. இந்த 5 ராசிகளுக்கு எச்சரிக்கை
சந்திர கிரகணம்: ஆகஸ்ட் இறுதியில் இருக்கிறோம். நாளை மறுநாள் செப்டம்பர் மாதம் பிறக்கவுள்ளது. செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. கிரக நிலைகளின் ஒவ்வொரு அசைவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த சந்திர கிரகணத்தில் ஐந்து ராசிகளுக்கு பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களுக்கு என்ன மாதிரியான சிக்கல்கள் வரும், என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்
சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 9.56 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.52 மணிக்கு நிறைவடைகிறது. பொதுவாக சந்திர கிரகணம் நடைபெறுவதற்கு 3 - 6 மணி நேரத்திற்கு முன்பு வயிற்றை காய போடுவார்கள். பிரிட்ஜில் இருந்து எடுக்காமல் காலை கிரகணம் முடிந்தவுடன் புதிதாக சமைத்துதான் சாப்பிடுவார்கள். ராகுவும், சந்திரனும் இணைவதை தான் சந்திர கிரகணம் என்பார்கள். இந்த முறை சந்திர கிரகணம் கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழ போகிறது.

சந்திர கிரகணம்
ராகு கேது நிழல் கிரகங்கள் விஷத்தன்மை கொண்டவை. சாப்பிடும் உணவு நஞ்சாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் தான் உணவுக் கட்டுப்பாடு, கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சிலர் உணவில் தர்பை புல்லை போட்டு வைப்பார்கள். அசுர சக்திகள் உச்சத்தில் இருக்கும் என்பதால் அந்த காலத்தில் சுப தெய்வங்களுக்கு பலம் இருக்காது. இதன் காரணமாக தான் கோயில் கர்ப கிரகங்கள் பூட்டி வைக்கப்படுகின்றன.
கும்ப ராசியில் கிரகணம் நிகழ்வதால் திரிகோண நிலையில் உள்ள மிதுனம், துலாம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ஐந்து ராசிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பூராட்டாதி, விசாகம், புனர்பூசம், சதயம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். சந்திர கிரகணத்தின் போது அரசியல் வாதிகள், அரசுப் பணிகளில் இருப்போர் அதிகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களுக்கு கண்டம் உள்ளது.
கவனம்
பீஹார், ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் உச்ச தலைவர்களுக்கு பாதிப்பு வரலாம். அதனுடன் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் உள்ள தலைவர்களுக்கு கண்டம் இருக்கிறது. அவர்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. விமானத்தில் பயணம் செய்யும் அனைத்து விஐபிகளும் கவனமாக இருக்க வேண்டும். இந்த வருடம் கிரக அமைப்புகள் சரியில்லை என்பதால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இதில் இருந்து தப்பிப்பதற்கு சில பரிகாரங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. உங்களுக்கு மிகவும் தெரிந்த ஸ்லோகங்களை தொடர்ந்து உச்சரிக்கலாம். மேலும் குட்டி கலசத்தில் நெல், தர்ப்பை, ரூ.11 தட்சணையாக போட்டு சிவன் கோயில் அர்ச்சகருக்கு தானமாக செய்தால் பாதிப்புகள் குறைவதற்கு வாய்ப்புள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications