நாளை சந்திர கிரகணம்: பரிகார நட்சத்திரத்தினர் யார்?.. இதையெல்லாம் மறந்தும் செய்யாதீங்க
சந்திர கிரகணம் 2026: 2026 ஆம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17 ஆம் தேதி நிறைவடைந்துள்ளது. ஆனால், இந்த கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. இந்நிலையில், ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை மார்ச் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணம் எப்போது நிகழ்கிறது, பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரத்திரனர் யார், என்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Chandra Grahan 2026].
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சூரியன், சந்திரன் ஆகியவை ராகு, கேதுவோடு இணைந்திருக்கும் காலத்தில் கிரகணங்கள் தோன்றுகின்றன. சூரியன் சந்திரன் ராகுவோடு இணைந்திருந்தால் சூரிய கிரகணமும், சந்திரன் சூரியன், ராகு, கேதுவுடன் இணைந்திருந்தால் சந்திரகிரகணும் தோன்றுகிறது. அமாவாசை தினத்தன்று சூரியகிரகணமும், பெளர்ணமி தினத்தில் சந்திரகிரகணமும் நிகழ்கின்றன.

சந்திரகிரகண நேரம்
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டில் முதல் சந்திரகிரகணம் நாளை நடைபெறுகிறது. விசுவாவசு வருடம் மாசி மாதம் 19 ஆம் தேதி, மார்ச் 3 ஆம் தேதி பெளர்ணமி தினத்தில் பூரம் நட்சத்திரத்தில் மாலை 3.20 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.47 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது. சூரியன் அஸ்தமனமாகும் பகுதியில் மட்டுமே இந்த கிரகணம் தெரியும். இந்த கிரகண காலகட்டத்தில் சந்திரன் முழுமையாக கருப்பாக மாறிவிடும். இந்த கிரகண காலகட்டத்தில் சில நட்சத்திரத்தினர் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
இந்தியாவில் தெரியுமா..
இந்தியாவில் இந்த சந்திரகிரகணம் கண்டிப்பாக தெரியும். சூரியன் அஸ்தமனமாகக் கூடிய பகுதிகளில் கிரகணத்தை உணர முடியும். மார்ச் 3 ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்குள் சாப்பிட்டு விடுவது நல்லது. பக்தியில், ஆன்மீகத்தில், விரதத்தில் இருப்பவர்கள், படிக்கும் மாணவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் 12 மணிக்கு மேல் சாப்பிடக் கூடாது. வயிறு சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்களும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மாலை 7 மணி வரை சாப்பிடக் கூடாது. 7 மணிக்குப் பிறகு குளித்து முடித்து, சிவனை வழிபாடு செய்துவிட்டு சாப்பிடுவது நல்லது.
பரிகார நட்சத்திரத்தினர்
சந்திர கிரகணத்தில் அபச்சொற்களை வீட்டுக்குள் பேசாமல் இருப்பது நல்லது. துஷ்டமான வார்த்தைகள் பலிக்கும் என்பதால் வீட்டுக்குள், அலுவலகத்தில் பேசாமல் இருப்பது நல்லது. மகம், பூரம், உத்திரம், பரணி, பூராடம் நட்சத்திரத்தினர் இந்த கிரகண காலகட்டத்தில் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. சந்திர கிரகணத்தன்று ஸ்லோகம் சொல்லிவிட்டு ஸ்நானம் செய்து, பரிகாரம் செய்து கொள்வது நல்லது.
செய்ய வேண்டியவை
சந்திரகிரகண காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. படிக்கும் மாணவர்கள், ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆசைப்படுபவர்கள், வாக்கு பலிதம் ஏற்பட, ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்கள் இந்த சந்திரகிரகண காலத்தில் ஸ்லோகம் சொல்வது நன்மையைத் தரும். இந்திரன், அக்னி, எமன், நிர்திதி, வருணன், வாய்வு, ஈசானன், குபேரன் ஆகிய எட்டு திக்கு பாலகர்களுக்கும் நாம் சொல்லக்கூடிய மந்திரங்கள் சென்று சேரும்.
சந்திரகிரகண சமயத்தில் ஸ்லோகங்களை சொல்வது, கேட்பது நன்மையைத் தரும். சந்திர கிரகணம் நிறைவடைந்த பின்னர் சிவன் வழிபாடு செய்வது நல்லது. சிவனுக்கு வில்வம் சாற்றி வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications