கன்னி ராசிக்கு கடல் கடந்து அடிக்கும் யோகம்.. சித்திரை மாதத்தில் முத்திரை
சித்திரை மாத ராசி பலன்: தமிழ் புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த விசுவாவசு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் இருக்கிறோம். பல புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் புதிய வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த சித்திரை மாதத்தில் பல முக்கிய கிரகங்களில் பெயர்ச்சியும் உள்ளன. இது கன்னி ராசிக்கு தரவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
யோகம்
பொதுவாக சித்திரை பௌர்ணமி விரதத்துக்கு சிறந்த மாதம். தங்கம் வாங்குவதற்கும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இது சிறந்த காலம். இந்த மாதத்தில் சுக்கிரனும், வியாழனும் பரிவர்த்தனை நிலையில் உள்ளனர். சூரியன் உச்சம் பெற்றுள்ளார். சனி சொந்த வீட்டில் இருக்கிறார். நீட்சபங்க மற்றும் பரிவர்த்தனை யோகங்கள் உள்ளன. கன்னி, விருச்சிகம், மகரம் ராசியினருக்கு சிறப்பாக இருக்கும்.

பெயர்ச்சி
இந்த மாதம் ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகிய 2 முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 26.4.2025 தேதி ராகு பகவான் கும்ப ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். குரு பகவான் 11.5.2025 மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 30.4.2025 புதன் நீட்ச நிலையில் இருந்து விலகி மேஷ ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.
இப்படி பல முக்கிய நிகழ்வுகள் இந்த சித்திரை மாதத்தில் நிகழவுள்ளது. மேலும், 4.5.2025 - 28.5.2025 அக்னி நட்சத்திர காலகட்டம். இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் கன்னி ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம்.
கன்னி
ஜென்ம ராசியில் இருந்து கேது விலகுகிறார். கடந்த ஒன்றரை வருடமாக உங்கள் ராசியில் கேது பகவான் இருந்து ஏராளமான இன்னல்களை கொடுத்திருப்பார். தற்போது மனக்கவலைகளில் இருந்து விடப்பட போகிறார்கள். ராகு கேது பெயர்ச்சி அற்புதமான பலன்களை கொடுக்கும். சித்திரை இரண்டாவது வாரத்தில் இருந்து எல்லாவற்றிலும் முத்திரை பதிக்கும் வகையில் செயல்படுவீர்கள். இறங்கிய காரியங்களில் வெற்றி குவியும்.
உத்யோகம்
உத்யோகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியிடம் இருந்த சிக்கல்கள் விலகி அவர்கள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் சரியாகி மகிழ்ச்சி பொங்கும். மன நிம்மதி ஏற்படும். ஒன்றாம் அதிபதியான புதன், ஐந்தாம் அதிபதியான சனி பகவான், ஒன்பதாம் அதிபதியான சுக்கிரன் உங்கள் ராசியை பார்ப்பது சிறப்பான பலன்களை அள்ளி தரும்.
வெளிநாடு
கடவுள் மற்றும் முன்னோர்களின் ஆசி உண்டு. திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். அரசு காரியங்களில் அணுகூலம் கிடைக்கும். அரசுப் பதவிகள் கிடைக்கும். வீடு, நிலம், வண்டி வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டுக்கு செல்லக் கூடிய முயற்சிகள் நிறைவேறும். பயணங்களால் ஆதாயம் உண்டு. சுபகாரிய தடைகள் நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக திட்டமிட்ட வீடு, பணி ஆகியவற்றில் மாற்றங்கள் நிகழும்.
காதல்
காதல் உறவில் இனிமை கூடும். கடன் சுமை குறையும். எல்லாவற்றிலும் நன்மைகள் கிடைக்கும். குரு பார்வையும் சிறப்பான யோகத்தை கொடுக்கும். தனாதிபதி உச்ச பலத்தில் இருப்பதாலும், குரு - சுக்கிரன் பரிவர்த்தனையாலும் பொருளாதாரத்தில் எந்தக் குறைவும் இருக்காது. பண வரவு சிறப்பாகவே இருக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் வாக்குக்கு செல்வாக்கு கூடும்.
கவனம்
எதிர்மறை எண்ணங்கள் வரும். கோபம் அதிகரிக்கும். வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பு நன்கு சிந்தித்து தெளிவாக செயல்பட வேண்டும். பயணங்கள், அலைச்சல் கூடும். எதிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது முன்னேற்றத்தை கொடுக்கும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications