சூரியன் உச்சம்.. சிகரம் தொடும் மேஷம்.. சித்திரை மாதத்தில் மிகப்பெரிய ஜாக்பாட்
சித்திரை மாத ராசி பலன்: தமிழ் புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த விசுவாவசு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் இருக்கிறோம். பல புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் புதிய வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த சித்திரை மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியும் உள்ளன. இது மேஷ ராசிக்கு தரவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
யோகம்
பொதுவாக சித்திரை பௌர்ணமி விரதத்துக்கு சிறந்த மாதம். தங்கம் வாங்குவதற்கும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இது சிறந்த காலம். இந்த மாதத்தில் சுக்கிரனும், வியாழனும் பரிவர்த்தனை நிலையில் உள்ளனர். சூரியன் உச்சம் பெற்றுள்ளார். சனி சொந்த வீட்டில் இருக்கிறார். நீச்சபங்க மற்றும் பரிவர்த்தனை யோகங்கள் உள்ளன. கன்னி, விருச்சிகம், மகரம் ராசியினருக்கு சிறப்பாக இருக்கும்.

பெயர்ச்சி
இந்த மாதம் ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகிய 2 முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 26.4.2025 தேதி ராகு பகவான் கும்ப ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். குரு பகவான் 11.5.2025 மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 30.4.2025 புதன் நீச்ச நிலையில் இருந்து விலகி மேஷ ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.
இப்படி பல முக்கிய நிகழ்வுகள் இந்த சித்திரை மாதத்தில் நிகழவுள்ளது. மேலும், 04.5.2025 - 28.05.2025 அக்னி நட்சத்திர காலகட்டம். இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் மேஷ ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம்.
மேஷம்
உங்கள் ராசியில் சூரியன் உச்ச நிலையில் இருக்கிறார். பஞ்சமாபதி, பூர்வ புண்ணியஸ்தானத்துக்கு உடையவர் உச்சத்தில் இருக்கிறார். தன ஸ்தானத்தில் குரு பகவான் உள்ளார். இந்த மாதம் முழுவதும் அமோகமாக இருக்கும். வருமானம் உயரும். உத்யோகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
முன்னேற்றம்
பொருளாதாரம் நன்றாக இருக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீச்சம் பெற்றுள்ளார். இது நல்லதல்ல என்றாலும் குரு பகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால் செல்வத்தில் குறைவு இருக்காது. சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உத்யோகம், தொழிலில், சமூகத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். அரசு மற்றும் அரசியல் கட்சியினருக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும்.
தைரியம்
அரசியல்வாதிகளுக்கு புகழ் பரவும். வாழ்க்கையில் அனைத்து வகையிலும் நன்மைகள் தேடி வரும். வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சூரியன் உச்சபலத்தில் இருப்பதால் உங்களின் மனக்குழப்பங்கள் நீங்கி தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் ஆளுமைப் பண்பு சிறப்பாக வெளிப்படும்.
பயணங்கள்
உத்யோகம், தொழில் தொடர்பாக வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. சுப விரயங்கள் உருவாகும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வண்டி, வாகனம் வாங்குவீர்கள். மனதில் நிம்மதி உருவாகும். கலை, எழுத்து, ஊடகம், ஆவணம் சம்பந்தப்பட்ட துறையினருக்கு நல்ல மேம்பாடு இருக்கும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குல தெய்வு அருள் கிடைக்கும்.
கவனம்
குடும்பத்தில் பிறரின் தலையீடு மட்டும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்த்து, விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பணிச்சுமை இருக்கும். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. கற்பக விநாயகர் வழிபாடு தடைகளை எல்லாம் தவிடு பொடியாக்கி இந்த மாதத்தை மேலும் சிறப்பாக அமைய உதவும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications