தனுசு ராசிக்கு 30 நாட்களில் வரும் அதிர்ஷ்டம்.. ஆவணி மாதத்தில் ஆச்சரியமான மாற்றம் காத்திருக்கு
ஆவணி மாத பலன்கள்: அம்மனுக்குரிய விசேஷ மாதமான ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கப் போகிறது. இந்த ஆவணி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஆவணி மாத கிரக நிலை
எல்லா விதமான சுப காரியங்களை செய்யவும் மக்கள் காத்துக் கொண்டிருக்கும் மாதமாகும். ஆவணி மாதம் என்பது சூரிய மாதம். சூரியனுடைய வீடான சிம்மத்திற்கே சூரியன் வரக்கூடிய மாதம் தான் ஆவணி. கார்காலம், சிம்ம மாதம் என்று ஆவணி மாதம் அழைக்கப்படும். ஏற்கனவே சிம்மத்தில் கேது இருக்கிறார். 7 ஆம் இடத்தில் ராகு, 8 இல் சனி, 11 இல் குரு அமர்ந்திருக்கின்றனர். இந்த ஆவணி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாகும். நண்பர்கள் வருகை, உறவினர்கள் வருகை என சந்தோஷமான காலகட்டமாக இருக்கும். குரு பார்வை இருப்பதால் அடுத்தடுத்து நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். குடும்பத்தில் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
குரு சுக்கிரன் பார்வை
7 ஆம் இடத்தில் இருந்த குரு, சுக்கிரன் இருவரும் ராசியைப் பார்க்கின்றனர். இரண்டு சுபர்கள் வலுத்துப் பார்க்கின்றனர். இனி உங்களுக்கு படிப்படியாக நன்மைகள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கி முன்னேற்றமான வாழ்க்கையை நோக்கி பயணிப்பீர்கள்.
பாக்கியம்
தொட்டதெல்லாம துலங்கும் அட்டகாசமான மாதமாக இருக்கும். செவ்வாய் 10 ஆம் இடத்திலும், பாக்கியாதிபதியான சூரியன் 8 இல் மறைந்திருந்த நிலையில் இப்போது 9 ஆம் இடத்தில் இருக்கிறார். தந்தை மூலமாக உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும். கோயில் திருப்பணி தொடர்பான விஷயங்கள், ஆலயத் திருப்பணி, யாத்திரிகள் தொடர்பான விஷயங்கள் போன்றவற்றை செய்யும் பாக்கியம் கிடைக்கும்.
வாக்குவாதம் வேண்டாம்
குடும்பத்தில் துணையிடம் வாக்குவாதத்தை தவிர்த்து இணக்கமாகச் செல்வது நல்லது. லாபத்தின் அளவு அபரிமிதமானதாக இருக்கும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். எந்தவொரு காரியங்களைச் செய்தாலும் அதில் வெற்றியைக் காண்பீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் தடைகள் அனைத்தும் நீங்கும்.
கவனம், வழிபாடு
வயிறு, கழுத்து, முதுகுதண்டுவடம், மயக்கம் போன்றவை ஏற்படும் என்பதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பைரவர் வழிபாடு நிம்மதியையும், தைரியத்தையும் ஏற்படுத்தும். பசு மாடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமையில் கோதுமை தவிடு, வெல்லமும் கலந்து கொடுப்பது அனைத்து விதமான வெற்றிகளையும் தரும். தடைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும்












Click it and Unblock the Notifications